இலங்கைக்கு இரும்புக் குண்டு கடத்தல்:கைதான 7 பேருக்கும் குண்டாஸ்!
சென்னை:சென்னை வழியாக இலங்கைக்கு கண்ணி வெடிகளைத் தயாரிக்க உதவும் இரும்பு குண்டுகளை (பால் பியரிங்குகள்) கடத்த முயன்று கைதான 7பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சென்னை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 23ம் தேதி சென்னை பெரியமேட்டில் உள்ள ஜெஹான் டிராவல்ஸ் நிறுவனனத்திலிருந்து மூடை மூடையாக சில பொருட்களைஏற்றிச் சென்ற மினி லாரியை கியூ பிரிவு போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அதில் 40 சாக்கு மூட்டைகளில் பால் பியரிங்குகள் இருந்தது தெரிய வந்தது. இவற்றை உரிய அனுமதி இல்லாமல் கொண்டு சென்றதும்,இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக இவை கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து மினி லாரியில் இருந்த சிவா என்கிற சிவசங்கரன், சேத்தன் என்கிற செல்வ சேத்தன், யோகராஜ் என்கிற கரண், நித்தி என்கிற சதீஷ்,பாரதிதாசன், ஜெயவேல், ரஷீக் அகமது, மயில்வாகணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல தூத்துக்குடியில் நடந்த சோதனையில் பிரபாகரன், கிரிதரன் ஆகியோர் பிடிபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல்மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் சிவா, சேத்தன், நித்தி, யோகராஜ், பிரபாகரன், பாரதி, கிரிதர் ஆகியோர் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications