அதிகாரியைக் கொன்ற ராணுவ வீரருக்கு தூக்கு!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:ராணுவ உயர் அதிகாரியைக் கொன்ற ராணுவ வீரருக்கு தூக்குத் தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம்உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பாதுகாப்புப் படைப் பணியில் ஈடுபட்டிருப்பவர் கே.சி.பெஹ்ரா. கடந்தஆண்டு அக்டோபர் மாதம் தனது உயர் அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் சாஹேத் சக்சேனா என்பவரைசுட்டுக் கொலை செய்தார் பெஹ்ரா.
இந்தக் கொலை வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. பெஹ்ரா மீதான குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவ நீதிமன்றம் பெஹ்ராவுக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
நாடு சுதந்திரமடைந்த பிறகு ராணுவ நீதிமன்றம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவருக்கு தூக்குத் தண்டனைவிதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications