பட்ஜெட் எதிரொலி: குடம், செருப்பு, வாளிஸ்கேல், ஜியாமட்ரி பாக்ஸ் விலை ஜிவ்
சென்னை:மத்திய பட்ஜெட்டில் கல்வி நிதிக்கான துணை வரி 3% உயர்த்தப்பட்டதால் ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடம், வாளி, செருப்பு,மாணவர்கள் பயன்படுத்தும் ஸ்கேல் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் 2 சதவீதமாக இருந்த கல்வி நிதிக்கான துணை வரி 3% ஆக உயர்த்தப்பட்டு விட்டது. இந்த துணை வரி உயர்வால், ஏழைமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக பிளாஸ்டிக் வாளி, குடம், கேன், தண்ணீர் அள்ளும் மக், பிளாஸ்டிக் செருப்பு, மாணவ மாணவியர்கள் அன்றாடம் பயன்படுத்தும்ஸ்கேல், ஜியாமட்ரி பாக்ஸ் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு பிளாஸ்டிக் குடத்தின் இன்றைய விலை ரூ. 43 .தல் 45 ஆக உள்ளது. முன்பு இது 40 ரூபாய் வரைக்கும் கிடைத்தது. அதேபோல பிளாஸ்டிக்கேன் விலையும் உயர்ந்து விட்டதால் அதில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டரின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
இதேபோல ரெடிமிக்ஸ் இட்லி, தோசை மாவு ஆகியவற்றை அடைத்து விற்கப் பயன்படுத்தும் பாலிதீன் பிளாஸ்டிக் பையின் விலையும் ஏறிவிட்டது. இதனால் இட்லி, தோசை மாவின் விலையும் கூடி விட்டது.
சாதாரண பிளாஸ்டிக் செருப்பும் கிடுகிடுவென விலையேற்றத்தைக் கண்டுள்ளது. ஸ்கேல், ஜியாமட்ரி பாக்ஸ் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துவிட்டதால் மாணவ, மாணவியர் கவலை அடைந்துள்ளனர். அவர்களை விட பெற்றோர்களுக்குத்தான் பலமுனை கவலை!
இதை விடக் கொடுமை, நோயாளிகளுக்கு ஊசி போட பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள், குளுக்கோஸ் அடைக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்பாட்டில்கள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்து விட்டதாம். இந்த விலை உயர்வு நோயாளிகளின் தலையில் தான் விடியும்.
இப்படி ஒட்டுமொத்தமாக நேரடி வரி விதிப்புக்கு ஆளாகும் அனைத்துப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.
இதில் ரொம்பக் கொடுமையான விஷயம், விமானம், கார்கள் தயாரிப்பின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் விலைமட்டும்உயராமல், குறைந்துள்ளதாம்! காரணம், இந்தப் பொருட்களுக்கான உற்பத்தி வரி 12சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டதுதான்.
இந்தியாவில் உள்ள எல்லோரும் பணக்காரர்களாகி விட்டார்கள் என்று என்று மத்திய அரசும், ப.சிதம்பரமும் நினைத்து விட்டார்களோ என்னவோ!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications