டோப் ஆட்டம்: பெண்கள், இளைஞர்கள் கைது
புனே:மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே போதைப் பொருட்களுடன் நடந்த ஆபாச நடனம் மற்றும் விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டசாப்ட்வேர் என்ஜீனியர்கள், இளம் பெண்கள், மாணவிகள் உள்பட 251 பேரை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புனே அருகே உள்ள சிறிய நகர் கானாபூர். இங்குள்ள ஒரு ஹோட்டலில் போதைப் பொருள் விருந்து நடப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீஸ் படை விரைந்தது. மொத்தம் 40 பேர் கொண்ட போலீஸார் மாறு வேடத்தில் அங்கு வந்தனர். ஏராளமான இளம்பெண்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம்பெண்கள், மாணவிகள், வெளிநாட்டினர் என இளவயதுக்காரர்களால் ஹோட்டல்நிரம்பி வழிந்தது.
அனைவரும் போதைப் பொருட்களை உட்கொண்டும், மது அருந்தியும் படு ஜாலியாக ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து மாறுவேடத்தில் வந்த போலீஸார் அத்தனை பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மொத்தம் 27 இளம்பெண்கள், 7 வெளிநாட்டினர் உள்பட 251 பேர் கைது செய்யப்பட்டனர். விருந்து நடந்த இடத்திலிருந்து 10 கிராம் சரஸ்,இரண்டரை கிலோ கஞ்சா, பீர் பாட்டில்கள், செல்போன்கள், வாகனங்கள், ஏராளமான பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேர் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதவிரவிமானப் பணிப்பெண்கள், பள்ளிக்கூட, கல்லூரி மாணவிகளும் இவர்களில் அடக்கம்.
இந்த போதை விருந்துக்காக டெல்லி, அகமதாபாத், தானே உள்ளிட்ட நகரங்களிலிருந்து இங்கு வந்துள்ளனர். வெளிநாட்டினரும் இந்த விருந்தில்கலந்து கொண்டிருப்பதால், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார்சந்தேகப்படுகின்றனர்.
கைது செய்யப்பட்ட 251 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தசம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications