விலைவாசி உயர்வால் வீழ்ந்தோம்: சோனியா
டெல்லி:விலைவாசி உயர்வால் பஞ்சாப், உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதாககாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு சோனியாகாந்தி பேசுகையில், விலைவாசி உயர்வுப் பிரச்சினை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கவலையில் காங்கிரஸ் கட்சியும் பங்கு பெறுகிறது.
விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளன. விலைவாசியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கனவேஎடுத்து வருகிறது.
விலைவாசி உயர்வுப் பிரச்சினையும் பஞ்சாப், உத்தரகாண்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியைகொடுக்க ஒரு முக்கிய காரணம் என்பதை நான் உணர்கிறேன்.
பொருளாதார வளர்ச்சிக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. வியாபார நம்பிக்கை, தேசிய அளவிலும், சர்வதேசஅளவிலும் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.
அதேசமயம், பொருட்களின் விலை உயர்வு கவலை தரும் அம்சமாக உள்ளது. விலைவாசி உயர்வு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.
பாஜகவின் போக்குக்குக் கண்டனம்:
நாடாளுமன்ற நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ள விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில்ஈடுபடுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊறு விளைவிப்பதாக அமையும்.
உருப்படியான, ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராக இல்லைஎன்பதையே இந்தப் போக்கு காட்டுகிறது. நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்குவது என்ற கொள்கைமட்டுமே அவர்களிடம் இருப்பதாக தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த விடாமல் ஊறுவிளைவிப்பது கண்டனத்துக்குரியது.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை விவாதிக்க காங்கிரஸ் கட்சியும், அரசும் தயாராகவே உள்ளன.நாடாளுமன்றக் கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications