கூட்டணி ஆட்சி: திமுக-காங். உடன்பாடு?தமிழக காங்.குக்கு 5-புதுவை திமுகவுக்கு 2!
சென்னை:கூட்டணி ஆட்சி குறித்து திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக திமுக அமைச்சரைவயில்காங்கிரஸுக்கு 5 அமைச்சர் பதவிகள் கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் திமுகவுக்கு 2இடம் தரப்படுமாம்.
திமுக அமைச்சரவயில் காங்கிரஸுக்கு இடம் வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரி வருகின்றனர். சமீபகாலமாக இந்தக் கோரிக்கை மேலும்வலுத்து வருகிறது.
96 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள திமுக கூட்டணிக் கட்சிகளின் பெரும்பான்மை பலத்துடன்தான் ஆட்சிப் பாறுப்பில் உள்ளது. இந்தக்கூட்டணியில் காங்கிரஸுக்கு 34 எம்.எல்.ஏக்களும், பாமகவுக்கு 18 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 பேரும், இந்திய கம்யூனிஸ்ட்கட்சிக்கு 6 பேரும் உள்ளனர். முன்பு அதிமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தற்போது திமுக கூட்டணியில் உள்ளனர். இவர்களுக்கு 2பேர் உள்ளனர்.
திமுக அமைச்சரவைக்கு பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோர் வெளியிலிருந்து ஆதரவு தருகின்றன. அமைச்சரவையில்சேர மாட்டோம் என இக்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மட்டுமே ஆரம்பத்திலிருந்து அமைச்சர் பதவி கோரி வருகிறது.
முதலில் இந்தக் கோரிக்கையை திமுக கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. ஆனால், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்கும், திமுகவுக்கும்இடையே முன்பு போல நல்லுறவு இருப்பதாக தெரியவில்லை. அடிக்கடி உரசல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பாமகவுடன் அதிக அளவில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியையும் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் சரியாக இருக்காது என்பதால்தான் அக்கட்சிக்கு அமைச்சர் பதவிகொடுக்க திமுக தலைமை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாமக ஆதரவை விலக்கிக் கொண்டால் கூட காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டுமே பெரும்பான்மை பலத்துக்குப் போதுமானது என்பதையும் திமுகஉணர்ந்துள்ளது. எனவேதான் காங்கிரஸ் கட்சியை அரவணைத்துக் கொள்ள அது திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் தர திமுக தலைமை முடிவு செய்து விட்டதாம். ஐந்து அமைச்சர் பதவியைவழங்கவும் அது முடிவு செய்துள்ளதாம். அவர்கள் யார் என்பதை தெரிவிக்குமாறும் காங்கிரஸ் கட்சியிடமும் திமுக தலைமை கோரியுள்ளதாம்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக இந்த ஐந்து பேரும் அமைச்சரவையில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் ஆகியோர் அமைச்சர் பதவிக்கான பட்டியலில்இப்போதைக்கு முன்னிலையில் உள்ளனராம்.
ஐந்து அமைச்சர் பதவி கிடைப்பதால் ஒவ்வொரு கோஷ்டியும் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவியைப் பிடிக்க கடும் போட்டியில் குதித்துள்ளதாம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தி.க அமைச்சர் பதவி தருவது போல, புதுச்சேரியில் திமுகவுக்கு 2 அமைச்சர் பதவி தரப்படும் எனவும்கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னைக்கு வந்திருந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசித்ததாகவும் பேச்சுநிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications