ஜப்பானில் பூகம்பம்: பாதிப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:கிழக்கு ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல நூறு பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் ஜப்பானின் கிழக்கில், டோரிஷ்மா என்ற இடத்தில் பூமிக்கடியில் 140 கிலோமீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த பூகம்பம்ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 6 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்சுனாமி அபாய எச்சரிக்கையும் விடப்படவில்லை.
ஜப்பானில் பூகம்பம் ஏற்படுவது மிகச் சாதாரண விஷயம். உலகில் ஏற்படும் பூகம்பங்களில் 20 சதவீதம் ஜப்பானில்தான் ஏற்படுகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications