விலைவாசி விரைவில் குறையும்: மன்மோகன் சிங்
டெல்லி:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விரைவில் குறையத் தொடங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் இன்று உரைநிகழ்த்தினார்.
பிரதமர் பேச்சின் விவரம்:
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு படிப்படியாக விரைவில் குறையத் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அரசும், ரிசர்வ்வங்கியும் இணைந்து இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இதன் காரணமாக பணவீக்கம் குறைந்து, விலைவாசியும் படிப்படியாக குறையத் தொடங்கும். விலைவாசியைக் குறைக்க அரசு மிகவும் சிரமப்பட்டுவருகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
எண்ணை வித்துக்கள், தானியங்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதால் விலைவாசி உயர்வைத் தடுக்கமுடியவில்லை.
சமையல் எண்ணை மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம் விலைவாசி உயர்வைஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். 11வது திட்டகாலத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா:
மகளிர் இட ஒதுக்கீடு மசோதவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாகஅனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்தை உருவாக்க அரசு முயற்சிக்கும்.
உலக மகளிர் தினமான இன்று இதுதொடர்பாக அனைவருக்கும் நான் அளிக்கும் உறுதி இதுதான். சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில்பெண்களை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திறம்பட மேற்கொள்ளும் என்றார் பிரதமர்.
முன்னதாக ராஜ்யசபாவில் உலக மகளிர் தினத்தையொட்டி, கேள்வி நேரத்திற்கு முன்பு பெண் உறுப்பினர்கள் பேசலாம் என அவைத் தலைவர்பைரான் சிங் ஷெகாவத் அனுமதித்தார்.
இதைத் தொடர்ந்து சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத், பாஜகவின் நஜ்மா ஹெப்துல்லா, பாஜகவின் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸின் அல்கா பல்ராம்,சமாஜ்வாடிக் கட்சியின் ஜெயா பச்சன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, தெலுங்கு தேசத்தின் துர்கா, நியமன உறுப்பினரான நிர்மலாதேஷ்பாண்டே ஆகியோர் பேசினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications