ஆடுகளை வெட்டி ரத்தம் குடிக்கும் நூதன விழா
திருச்சி:திருச்சி புதூரில் ஆடுகளை வெட்டி ரத்தம் குடிக்கும் வினோத் திருவிழா நடந்தேறியது.
திருச்சி புதூரில் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குட்டிக்குடி திருவிழா வெகு விமரிசையாகநடைபெறும்.
இந்த திருவிழாவின்போது, நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ரத்தத்தை பக்தர்கள் குடிப்பார்கள்.
இந்த ஆண்டும் நான்கு நாள் குட்டிக் குடி திருவிழா வெகு விமரிசையாக தொடங்கி நடந்தது. விழாவின் கடைசி நாளான இன்று நூற்றுக்கணக்கானஆடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ரத்தத்தை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பிடித்து பருகினர்.
ஆடுகளின் ரத்தம் குடிப்பதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். இந்த ரத்தம் குடிக்கும் திருவிழா கடந்த பலநூற்றாண்டுகளாக இருந்து வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
கோவிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஆடுகளை கோவில் தலைமை பூசாரி பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி ரத்தத்தை பக்தர்களுக்குகுடிக்கக் கொடுத்தார்.
இந்தக் கோவிலில் தமிழக அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் ஆடுகள் காணிக்கையாக தரப்பட்டு பலி கொடுக்கப்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆடு வெட்டி ரத்தம் குடிக்கும் விழாவையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications