விடுதலைப் புலிகளின் ஹவாலா தொடர்புதிமுக தொண்டர் உள்பட 3 பேர் கைது
சென்னை:விடுதலைப் புலிகள், ஹவாலா மூலம் ஆயுதக் கடத்தலுக்குத் தேவையான பணத்தை கைமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக திமுகதொண்டர் உள்பட 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் அருள் சீலன் என்ற இலங்கைத் தமிழரின் வீட்டை கியூ பிரிவு போலீஸார் அதிரடியாக சோதனையிட்டனர்.அப்போது அவரது வீட்டிலிருந்து ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்து அருள்சீலனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் இலங்கையைச் சேர்ந்த ராகுல்என்பவர்தான் இந்தப் பணத்தைக் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து திருச்சியில் தங்கியிருந்த ராகுலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
அவர் கொடுத்த தகவலின்போரில் பெரம்பலூர் , வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான சோப்பு பேக்டரியில்சோதனை நடத்தப்பட்டது. அங்கு 4 டன் இரும்புக் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ரமேஷ் போலீஸ் பிடியில் சிக்காமல்தலைமறைவாகி விட்டார்.
இந்த இரும்புக் குண்டுகளை ஆர்டர் கொடுத்து வாங்கியது இலங்கையைச் சேர்ந்த சதீஷ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சதீஷும்சிக்கவில்லை, அவர் இலங்கைக்குத் தப்பி விட்டார்.
இந்த நிலையில் ராகுலிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி சென்னையில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விடுதலைப் புலிகள்அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களான பிரதீபன், பகீரதன் மற்றும் மண்ணடியைச் சேர்ந்த பரக்கத் ஆகியோரைப் பிடித்தனர்.
இவர்களில் பரக்கத் திமுகவைச் சேர்ந்தவர். அப்பகுதி திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. காபிபோசாசட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒருமுறை கைது செய்யப்பட்டவர். இத்தனை பேரையும் கைது செய்து விசாரித்தபோது போலீஸாருக்குத் திடுக்கிடும்தகவல்கள் கிடைத்தன.
சதீஷிடம் சேர்ப்பித்து விடுமாறு கூறி பிரதீபன், பகீரதன் ஆகியோரிடம் பரக்கத் ரூ. 10 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார்.
இவர்கள் இந்தப் பணத்தை சதீஷிடம் சேர்ப்பிக்காமல், இலங்கையைச் சேர்ந்த இன்னொருவரான ராகுலிடம் கொடுத்துள்ளனர். ராகுல் அந்தப்பணத்தை அருள் சீலனிடம் தந்துள்ளார். அந்த சமயத்தில்தான் அவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து விட்டனர்.
பெரம்பலூரில் பிடிபட்ட இரும்பு குண்டுக்காக இந்தப் பணம் கைமாறப்பட்டதா, எதற்காக இந்த ஹவாலா பணப் பரிமாற்றம் என்பது குறித்துபோலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பரக்கத்துக்கு திமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாம். நீண்ட காலமாகவே, விடுதலைப் புலிகளுக்காகஹவாலா பணப் பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். புலிகள் அமைப்பின் ஏஜென்ட்டாகவும் அவர் செயல்பட்டு வந்துள்ளார்.
சென்னையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்சி கொண்டு வரப்பட்டு அங்கு 3வது குற்றவியல் நீதிமன்றததில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் பத்மா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஒருவர் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications