கள்ளச்சாராய ஒழிப்பு: ராமதாஸ் காட்டும் வழி
சென்னை;நான் சொல்லும் யோசனையைக் கேட்டு காவல்துறைக்கு உத்தரவிட்டால், கள்ளச்சாராயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விடும், 6மாதத்தில் கள்ளச்சாராயத்தை ஒழித்துக் கட்ட முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகி விடும், அரசின் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லாத நிலை ஏற்படும் என முதல்வர்கருணாநிதி கூறியிருந்தார்.
இதற்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்கிறார் முதல்வர் கருணாநிதி. அப்படியானால், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை, அதனால்தான் கடைகளைத் திறந்துவிட்டிருக்கிறோம் என்பதுதான் இதன் பொருள்.
குஜராத் மாநிலத்தில் 3 ஆயிரம் சிறிய ஊர்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை நிறைவேற்றப்போகிறோம் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
குஜராத்தில் தமிழ்நாட்டைப் போல மது விலக்கு தளர்த்தப்படவில்லை, அரசாங்க மதுக் கடைகளும் அங்கு இல்லை, மது விற்பனையினால்கிடைக்கும் ஆயத் தீர்வை மற்றும் விற்பனை வரி வருவாயும் இல்லை. ஆனாலும் அங்கே வளர்ச்சிப் பணிகள் எதுவும் தடைபட்டு நிற்கவில்லை.
தமிழ்நாட்டில் மது விலக்குக்கு தனியாக துறை இருக்கிறது. மது விலக்கை செயல்படுத்த காவல்துறை இருக்கிறது. ஆனால் மது விலக்குதான் இல்லை.
அதற்காக, காவல்துறையை என்னிடம் கொடுத்துப் பாருங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். நான் சொல்லும் கருத்துக்களைக் கேட்டுகாவல்துறைக்கு நீங்கள் உத்தரவு மட்டும் இடுங்கள். 6 மாதத்தில் கள்ளச்சாராயம் ஒரு துளி கூட இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.
5 ஆண்டுகளில் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் 2 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இது பெருமைப்படத் தக்கவிஷயமா? அரசுக்கு 6,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றால், பொதுமக்களிடமிருந்து கிடைத்த பணம் எவ்வளவு?
மது விற்பனை மூலம் அரசுக்கு 1 ரூபாய் வருமானம் வருகிறது என்றால், பொதுமக்கள் 3 ரூபாயை இழந்திருக்கிறார்கள் என்று பொருள்.அப்படியானால் மது அருந்துவதற்காக பொதுமக்கள் செலவழித்துள்ள தொகை ரூ. 18 ஆயிரம் கோடி.
ஏழைக் குடும்பங்கள் பறிகொடுத்துள்ள பணம் தான் அரசுக்கு வரும் வருமானம். அதை வைத்து அவர்களுக்கு சலுகை என்ற அவல நிலைவேண்டாம்.
இந்தப் புதிய மது விலக்குக் கொள்கை மக்களுக்கும் தேவையில்லை, தமிழக அரசுக்கும் வேண்டாம். படிப்படியாக மதுக் கடைகளை மூடநடவடிக்கை எடுங்கள். மக்களுக்கான சலுகைகளையும், திட்டங்களையும் நிறைவேற்ற எப்படி நிதியை வசூலிக்கலாம் என்பதற்கு குஜராத்மாநிலத்தைப் பின்பற்றுங்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications