காவிரி: நடராஜன் தலைமையில் பாதயாத்திரை
சென்னை:காவிரியில், தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தியும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும் பூம்புகாரிலிருந்து, மேட்டூர் அணை வரை காவிரிடெல்டா மரபுரிமை மீட்பு கமிட்டியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரான, சசிகலா கணவர் நடராஜன் தலைமையில் 14 நாள் பாதயாத்திரை 12ம்தேதி தொடங்குகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், தமிழரசி பத்திரிக்கையின் ஆசிரியருமான எம்.நடராஜன்தலைமையில், காவிரி டெல்டா மரபுரிமை மீட்பு கமிட்டி என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் தமிழகத்தின் உரிமையை மீட்பது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்திற்கு பாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருப்பதற்குகண்டனம் தெரிவித்து பூம்புகார் முதல் மேட்டூர் அணை வரை பாதயாத்திரை நடத்த இந்த கமிட்டி முடிவு செய்துள்ளது.
12ம் தேதி பூம்புகாரில் தொடங்கும் பாதயாத்திரைக்கு நடராஜன் தலைமை வகிக்கிறார்.
பாதயாத்திரைப் போராட்டம் குறித்து நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் நலனைக் காக்கக் கோரி இந்த பாதயாத்திரைநடத்தப்படுகிறது. இதுதவிர நடுவர் மன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு விரோதமாக கூறப்பட்டிருப்பதையும் நாங்கள் கண்டித்து பாதயாத்திரைநடத்துகிறோம்.
17 ஆண்டு கால நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் வெளியாகியுள்ள நடுவர் மன்றத் தீர்ப்பில், இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்ட 205 டிஎம்சிதண்ணீரை விட குறைவாக, 192 டிஎம்சியே தரப்பட்டுள்ளது நியாயமற்ற செயல்.
இந்த விஷயத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை திமுக அரசு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யத் தவறி விட்டது.
நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான அம்பரீஷ் தனது பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பைக்காட்டியுள்ளார். ஆனால் தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சர்கள் யாரும் வாய் கூட திறக்க மறுத்து அமைதியாக இருப்பது வியப்பாகவும்,வேதனையாகவும் உள்ளது.
காவிரிப் பாசனப் பகுதி மாவட்டத்திலிருந்து வந்தவரான முதல்வர் கருணாநிதி, விவசாயிகளின் அவல நிலையை, அவர்களுக்கு ஏற்படப் போகும்இழப்பை பகிரங்கமாக கூறி தனது எதிர்ப்பைக் காட்டத் தவறி விட்டார்.
நடுவர் மன்றத் தீர்ப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், மற்ற மத்திய அமைச்சர்களும்பொருத்தமில்லா, புரியாத பதில்களை அளித்து வருகின்றனர்.
பாதயாத்திரையின்போது இவற்றையெல்லாம் நாங்கள் மக்களிடமும், விவசாயிகளிடமும் விளக்கிக் கூறப் போகிறோம். நடுவர் மன்றத் தீர்ப்பில்உள்ள அம்சங்களை விளக்கிச் சொல்லப் போகிறோம்.
நடுவர் மன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுக்களையும் விநியோகிப்போம். தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கத்தவறிய திமுக அரசின் போக்கையும் விவசாயிகளிடம் வெட்ட வெளிச்சமாக்கப் போகிறோம் என்றார் நடராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications