இலங்கை கடற்படைக்கு திமுக கண்டனம்:அமைச்சர்கள் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்புநாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,

ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், மீனவர்களைத் தாக்குவதும், துப்பாக்கியால்சுட்டுக் காயப்படுத்துவது, கொலை செய்வது ஆகியவை தொடர் கதையாகி வருகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசைக் கண்டித்தும் அறிக்கைவெளியிட்டிருந்தார்.

ஆனால் இலங்கை படையினரின் தாக்குதல் நின்றபாடில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்களைச் சுட்டுப் படுகொலை செய்து வருகின்றனர். இதைக்கண்டிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர் திரும்பத் திரும்ப தாக்குதல் நடத்தினால் தமிழனுடைய கை, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்என்று மட்டும் கருத வேண்டாம் எனவும் கடுமையாக எச்சரித்திருந்தார் முதல்வர்.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக்கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கிறிஸ்டோபர் என்ற மீனவர் பலியாகியுள்ளார். இரு மீனவர்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சென்னை டிடிகே சாலையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கண்டனஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்குகிறார். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி முன்னிலை வகிக்கிறார். மத்திய, மாநிலஅமைச்சர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை மாவட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கழகத்தின் பல்வேறுஅணியினர் பெரும் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை வெறிக்கு இதுவரை 123 பேர் பலி:

இதற்கிடையில் இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலில் சிக்கி இதுவரை 123 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்தஎண்ணிக்கை 250க்கும் மேல் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் இனப் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியது முதல் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லது அவர்களைப்போன்ற பிற போராளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அபத்தமான கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை அரசு.

தமிழர்களை எதிரிகளாக நினைத்துக் கொண்டு, தங்களது அன்றாட வாழக்கைக்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்கச் செல்லும்தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கிக் கொன்று வருகிறது.

உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படி ஒரு இனப் படுகொலை நடந்து கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழர்களை தாக்கி அழிப்பதைவெறித்தனத்தோடு செய்து வருகிறது இலங்கை அரசு.

இலங்கை அரசின் இந்தப் போக்கை மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் கண்மூடிக் கிடக்கிறது. இந்தியா என்ற கூட்டமைப்பில் தமிழகமும் ஒன்று,தமிழர்களும், இந்தியர்களே என்ற உணர்வு, டெல்லியில் உள்ளவர்களிடம் இல்லாமல் போய் விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு மத்தியஅரசு மகா மெளனம் காத்து வருகிறது.

கடந்த 1973ம் ஆண்டு முதல் தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறது இலங்கை கடற்படை என்பது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு தகவல். ஆனால்இத்தனை காலமாகியும் இந்திய அரசு, தமிழக மீனவர்களைக் காக்க உருப்படியான நடவடிக்கை எதையாவது எடுத்திருக்கிறதா என்று கேட்டால்இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.

1973ம் ஆண்டு முதல் 2004 வரை மொத்தம் 123 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத்துறையின் கணக்கு கூறுகிறது.ஆனால் இது மிக மிக குறைந்த எண்ணிக்கை, உண்மையில் 250க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்திருப்பதாக நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டைமாவட்ட மீனவர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஐந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான படகுகள்,மீன் வலைகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஒரு பகுதியாக ஒரு காலத்தில் இருந்த கச்சத்தீவை இந்திய அரசு, இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததே இந்த அவலத்திற்குமுக்கியக் காரணம். கச்சத்தீவு பகுதியில்தான் மீன் வளம் நிறைய உள்ளது.

அப்படிப்பட்ட மிக முக்கியமான ஒரு பகுதியை, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த ஒரு பகுதியை அப்படியே லட்டு போலஇலங்கைக்குத் தூக்கி கொடுத்து தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் இந்திய அரசு விளையாடி விட்டது.

கச்சத்தீவு பகுதிக்குப் போனால்தான் மீன் கிடைக்கும் என்பதால் வேறு வழியின்றி நமது மீனவர்களும் அங்கேயே போகிறார்கள், அநாவசியமாகஉயிரை விட்டு வருகிறார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு இந்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதி முடிவு காண வேண்டும், தமிழக மீனவர்களை இந்தியமீனவர்களாகக் கருதி அவர்களின் வாழ்க்கைக்கு வழி காண வேண்டும். இல்லாவிட்டால் மீனவர்களின் கொந்தளிப்பை சமாளிக்க முடியாத நிலைஉருவாகக் கூடும் என்று மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இலங்கையை எச்சரிக்க வைகோ கோரிக்கை:

இதற்கிடையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை அரசை மிகக் கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோகோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். அப்போது இரண்டு கோரிக்கை மனுக்களை அவரிடம்கொடுத்தார்.

அதில், இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறார்கள். இதுதொடர் கதையாகி வருகிறது. ஆனால் இந்தியகடற்படையும், கடலோரக் காவல் படையும், தமிழக மீனவர்களைக் காக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றன.

இலங்கை படையோடு, இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் ரகசிய உறவு வைத்துள்ளார்களா என்பதை அறிய வேண்டும். இந்தக்கேள்வி இப்போது ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ராமேஸ்வரம் அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வெறித்தனமாக தாக்கி சுட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட படகுகள்சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர சம்பவத்தில் கிறிஸ்டோபர் என்ற மீனவர் பலியாகியுள்ளார்.

இந்திய மீனவர்கள் கடலுக்குச் சென்றால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு இந்தியஅரசு உத்தரவிட வேண்டும். கடுமையாக எச்சரிக்க வேண்டும். இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்றஇந்திய கடற்படைக்கும், கடலோரக் காவல் படைக்கும் உத்தரவிட வேண்டும் என்று ஒரு மனுவில் வைகோ கூறியிருந்தார்.

இன்னொரு மனுவில், இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் கொலை வெறித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதை உடனடியாக நிறுத்தஇலங்கை அரசை கடுமையாக இந்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களை பட்டினி போட்டு சாக வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஈவு இரக்கமற்ற வகையில், அப்பாவிஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர் என்று கூறியிருந்தார் வைகோ.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், இலங்கைத் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும், அதற்குரிய நடவடிக்கைகளை இந்தியஅரசு எடுக்கும் என்றும் வைகோவிடம் உறுதியளித்தார்.

பின்னர் வெளியில் வந்த வைகோவிடம் செய்தியாளர்கள் பேசியபோது, விடுதலைப்ப புலிகளுக்கு உதவி செய்யும் அரசியல் கட்சிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி கூறியுள்ளார்.

எங்களது நிலை மிகத் தெளிவாக உள்ளது. ஈழப் பிரச்சினையில், ஈழத்தில் உள்ள விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம். அவர்கள்தான் அங்குள்ளதமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வருகிறார்கள். மொத்தத் தமிழர்களும் விடுதலைப் புலிகள் பக்கம்தான் உள்ளனர்.

ஈழத்தில் உள்ள தமிழர்களை, அவர்களது போராட்டத்தை, ஈழத்தில் உள்ள விடுதலைப்ப புலிகளின் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்துஆதரிக்கிறோம், ஆதரிப்போம்.திதமிழகத்தில், தமிழகத்திற்கு எதிரான, இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்திய அரசுக்கு எதிராகவோ,தமிழகத்திற்கு விரோதமாகவோ நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று கூறினார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+