இலங்கை கடற்படை சுட வேண்டிய அவசியம் இல்லை; வக்காலத்து வாங்கும் ஏ.கே.அந்தோணி
டெல்லி:இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ,அவசியமோ இல்லை என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பிக்கள் பிரச்சினைஎழுப்பினர்.
அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விவகாரம்குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் வந்து இதுகுறித்து விவாதித்துள்ளார். இலங்கை அரசுக்குக்கிடைத்துள்ள தகவலின்படி அந்நாட்டு கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சுடவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.
ஆனால் விடுதலைப் புலிகள்தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை அரசு கூறுகிறது.
தமிழக மீனவர்களின் நலனைக் காக்க மத்திய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார் அந்தோணி.
முன்னதாக திமுக உறுப்பினர் செ.குப்புசாமி பேசுகையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பல தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications