பெண் எஸ்.ஐ. மர்ம சாவு: பாமக போராட்டம்பக்கத்து வீட்டு எஸ்.ஐ. மனைவியுடன் கைது!

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம்:கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுமதி என்பவர், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சப்இன்ஸ்பெக்டர் முரளிக்கும், தனக்கும் இருந்த கள்ளத் தொடர்பு அம்பலமானாதால் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டதாக கூறி பாமகவினர் போராட்டத்தில் குதித்ததால், முரளியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

Sumathiவிருத்தாச்சலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுமதி (34). இவரது கணவர் ராஜாமணி, விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக உள்ளார். இவர்களுக்க நந்தினி என்ற 12 வயது மகளும், துளசிபாலன் என்கிற 9 வயது மகனும் உள்ளனர்.

சுமதி, விருத்தாச்சலத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சப் இன்ஸ்பெக்டர் முரளி.அவரது மனைவி காஞ்சனா தேவி. முரளிக்கும், சுமதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டி.எஸ்.பி. அலுவலகம் சென்ற சுமதி, அங்கு வழக்கமான வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு நள்ளிரவு 1.30 மணியளவில் வீடு திரும்பினார்.

இந்த சமயத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. முரளி, அதிகாலை 3.30 மணிக்கு காவலர் குடியிருப்புக்குத் திரும்பினார். தனது வீட்டுக்குச்செல்லாமல் நேராக சுமதி வீட்டுக்குப் போயுள்ளார்.

கணவர் முரளி, சுமதி வீட்டுக்குப் போவதைப் பார்த்து விட்டார் முரளியின் மனைவி காஞ்சனா தேவி. கோபமடைந்த அவர் நேராக சுமதி வீட்டுக்குப்போய் அவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கி, திட்டியுள்ளார். மனைவியை சமாதானப்படுத்திய முரளி, தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

இந்த சண்டையால் அப்செட் ஆன சுமதி வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே போய் விட்டார். தனது வீட்டுக்குப் போன பிறகும் காஞ்சனாவுக்குஆத்திரம் தீரவில்லை. மறுபடியும் ஆவேசமாக அவர் சுமதி வீட்டை நோக்கி ஓடினார்.

இதையடுத்து முரளியும், அவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சப் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன், அவருடைய மனைவி ஜெயமதி ஆகியோரும்காஞ்சனாவைப் பிடித்து நிறுத்த பின்னால் ஓடினர்.

பூட்டியிருந்த சுமதி வீட்டுக் கதவை காஞ்சனா ஆவேசமாக தட்டி வெளியே வருமாறு கூறி குரல் கொடுத்தார். ஆனால் உள்ளேயிருந்து எந்த சப்தமும்வரவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், கதவை உடைத்து உள்ளே போனார்கள். அப்போது தனது படுக்கை அறையில், சுமதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ந்தனர். பின்னர் சத்தம் போடாமல் அனைவரும் கீழே வந்து விட்டனர்.

ஆவேசமாக மேலே போனவர்கள் சத்தம் போடாமல் கீழே இறங்கி வந்ததைப் பார்த்த சுமதி வீட்டுக்குக் கீழ் வசிக்கும் ஒரு போலீஸ்காரர் மேலேபோய்ப் பார்த்துள்ளார். சுமதி இறந்திருப்பதைப் பார்த்த அவர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முரளி மற்றும் காஞ்சனா தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சுமதியின் கணவருக்குத் தகவல் போய் அவர் தனது உறவினரும், பாமக ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார் உள்ளிட்டோருடன்அங்கு விரைந்து வந்தார்.

அவர்களுடன் ஏராளமான பாமகவினரும் வந்திருந்தனர். அனைவரும் விருத்தாச்சலம் காவல் நிலையம் சென்று என்ன நடந்தது என்று விசாரித்தனர்.முரளியையும், காஞ்சனாவையும் உடனடியாக கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் தரப்பில் உறுதியான பதில் கிடைக்காததால் பாமகவினர் அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். இதனால் பரபரப்பு கூடி கடைகள்அடைக்கப்பட்டன. கலைந்து போகுமாறு போலீஸார் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி பாமகவினரைக்கலைத்தனர்.

முரளி, காஞ்சனா தேவியிடம் விசாரணை நடத்திய பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, சுமதி வைத்திருந்த செல்போனைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அது எங்கே போனது என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+