காவிரி: இன்று ஜெ. உண்ணாவிரதம்-திமுக கூட்டணி மீது கடும் தாக்கு
சென்னை:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆர்வமே இல்லை என அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய கெஜட்டில் வெளியிடக் கோரி இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தவுள்ளார் ஜெயலலிதா. இந் நிலையில் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றம் 16 ஆண்டுகளுக்கு பின், இந்த வருடம் பிப்ரவரி 5ம் தேதி தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனை உடனடியாகநடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், வருகிற குறுவை பயிரினை டெல்டா விவசாயிகள் நடவு செய்வதற்கு தீர்ப்பில் கண்டுள்ளபடி ஜூன்மாதத்தில் தண்ணீர் பெறும் வகையில் நடுவர் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று நான் பலமுறைகேட்டுள்ளேன்.
சில கட்சிகளும் இதை வலியுறுத்துகின்றன. ஆனால் தீர்ப்பு வந்த தினத்தில் இருந்து நடுவர் மன்ற தீர்ப்பின் பலனை பெற கருணாநிதி தயாராகஇல்லை.
நம் பிரதமரை சந்தித்து அதிமுக மற்றும் மதிமுக ஆகியவை நடுவர் மன்ற தீர்ப்பினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. ஆனால் இப்போது வரை திமுகவினரும், காங்கிரசாரும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீர்ப்பிான அமல்படுத்துவதுகுறித்து எந்த ஆர்வமும் காட்டவில்லை.
எனவே தமிழக நலனுக்காக நாளை நான் சென்னையிலும், அதிமுகவை சேர்ந்த மற்றவர்கள் வருகிற 21ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும்உண்ணாவிரதம் இருப்போம் என அறிவித்தேன்.
இதனால் அச்சமுற்ற கருணாநிதி, 2 வழக்கறிஞர்கள் தீர்ப்பு வந்த நாளில் இருந்து 90 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்ற புதுகருத்தை சொல்கிறார். நான் என் அறிக்கையில் கருணாநிதியால் நியமிக்கப்படுகின்ற வழக்கறிஞர்களின் கருத்துகளை எழுத்து மூலமாக பெற்றுஅங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தர வேண்டும் என்றும் எனது சார்ப்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள்,தொலைக்காட்சியினர் முன்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
இதற்கு கருணாநிதியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக 2 வழக்கறிஞர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் இவ்வாறாக கருத்துதெரிவித்துள்ளார்கள் என கருணாநிதி கூறுவது உண்மைக்கு புறம்பானது.
முதலமைச்சர் பதவியில் இருக்கின்ற ஒருவர் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் மிகுந்த மன சுத்ததுடனும், அர்ப்பணிப்புஉணர்வுடனும், தியாக மனப்பான்மையுடனும் தெளிவான சிந்தனையுடனும் பணியாற்ற வேண்டும்.
அதிமுக பொறுத்த வரையில் நேர்மையான உணர்வுடனும், சற்றும் குறையாத ஆர்வத்துடனும் இந்த பிரச்சனை மேலும் எடுத்து செல்லும் என்பதைதமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications