இலங்கைக்கு ராக்கெட் லாஞ்சர் தயாரிப்புகருவி கடத்தல்: 2 மீனவர்கள் கைது
ராமநாதபுரம்:இலங்கைக்கு ராக்கெட் லாஞ்சர் தயாரிக்க பயன்படும் கருவியைக் கடத்த முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் படகும் பறிமுதல்செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது தோப்புவலசை கிராமம். மீனவ கிராமமான இங்கு கடந்த நவம்பர் 8ம் தேதி சுங்க இலாகாஅதிகாரிகள் ரோந்து வந்தனர். அப்போது கடற்கரையில் நின்றிருந்த நான்கு பேர் அதிகாரிகளைப் பார்த்து விட்டு ஓடினர்.
இதையடுத்து அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, கடலில் மிதந்த நிலையில் ஒரு கருவி தென்பட்டது.
அதைக் கைப்பற்றி பரிசோதித்தபோது, லேத் நிறுவனங்களில் உள்ள இயந்திரம் என்பது தெரிய வந்தது. இதைப் பயன்படுத்தி ராக்கெட் லாஞ்சர்கள்தயாரிக்க முடியும் என்பதால் அந்த நான்கு பேரும் இதை இலங்கைக்குக் கடத்த திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் யோசித்தனர்.
இதையடுத்து தப்பி ஓடிய 4 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களில் இருவர் சிக்கியுள்ளனர்.தனுஷ்கோடியைச் சேர்ந்த பாலன், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முத்துமுனியன் ஆகிய அந்த இருவரையும் கைது செய்த கியூ பிரிவு போலீஸார்,அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.
இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுதக் கடத்தல் தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும்,இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications