தமிழகம் முழுவதும் 900 புதிய பஸ் ரூட்கள்!

Subscribe to Oneindia Tamil

கரூர்:தமிழகம் முழுவதும் புதிதாக 900 வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், புதிய பேருந்து வழித்தடங்களை அவர் தொடங்கி வைத்தார்.பின்னர் நேரு பேசுகையில்,

தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 900 வழித்தடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதில் 500 புதியவழித்தடங்களை ஏற்படுத்தவும், ஏற்கனவே இருக்கும் வழித்தடங்களை சீரமைக்கவும் முதல்வர் கருணாநிதி ரூ.550 கோடியை ஒதுக்கியுள்ளார்.

இதுவரை 368 அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 150 பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும். மற்றவை தமிழகம்முழுவதும் இயக்கப்படும்.

தற்போது தர்மபுரியில் 50, கிருஷ்ணகிரியில் 50, ஊட்டியில் 30 என மொத்தம் 130 வழித் தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 90 சதவீதம் புதியவழித்தடங்களாகும்.

பள்ளி செல்லும் ஏழை மாணவர்களுக்காகவும், கிராமங்களிலிருந்து மருத்துவமனை போன்ற தேவைக்காக நகரங்களுக்கு வருபவர்களுக்காக இந்தபுதிய வழித்தடங்களில் பேருந்துகள் விடப்படுகின்றன என்றார் நேரு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+