காருண்யா பல்கலை.யில் மாணவர்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

கோவை:கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கவிருந்த நேரத்தில் 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டுமாணவர்களுக்கிடையே பெரும் மோதல் மூண்டது.

இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் பறந்தது. போலீஸார்விரைந்து வந்து மோதலை அடக்கி அமைதியை ஏற்படுத்தினர்.

ரகளை தொடர்பாக 3ம் ஆண்டு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ரகளையில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு 2ம் ஆண்டு மாணவர் ஒருவரை, பேருந்து நிலையம் அருகே வைத்து 3ம் ஆண்டு மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.இதையடுத்தே இன்றைய கலவரம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மாணவர்களின் மோதலைத் தொடர்ந்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. 3ம் ஆண்டு மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+