பெர்முடாவுடன் இன்று இந்தியா மோதல்!
போர்ட் ஆப் ஸ்பெயின்:வங்கதேசத்துடன் மோதி தோல்வி அடைந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில், பெர்முடா அணியை இன்று இந்தியா சந்திக்கிறது.இன்றையப் போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றே தீர வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பைப் போட்டியின் முதல் போட்டியிலேயே இந்தியா சறுக்கி விழுந்துள்ளது. சரிவிலிருந்து மீண்டு சரித்திரம் படைக்குமா அல்லதுபேக்கப் ஆகி ஊருக்குத் திரும்புமா என்ற பயத்திலும், பீதியிலும் இந்திய ரசிகர்கள் டென்ஷனாக உள்ளனர்.
இந்த நிலையில் 2வது போட்டியில் இன்று குட்டி அணியான பெர்முடாவை இந்தியா போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இன்று சந்திக்கிறது.இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்றாலும் கூட (சொல்ல முடியாது, சொதப்பினாலும் சொதப்பி விடுவார்கள்!) அதிக ரன் அல்லது விக்கெட்வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய நிலை உள்ளது.
இன்று சந்திக்கும் இந்தியாவும், பெர்முடாவும் இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் முட்டைப் புள்ளிகளுடன் உள்ளன. இன்றையபோட்டியில் முதலில் இந்தியா பேட் செய்தால் அதிக அளவில் ரன்களைக் குவித்து, பின்னர் பெர்முடாவை அதிக ரன் வித்தியாசத்தில் தோற்கடிக்கவேண்டும்.
தற்போதைய நிலையில் இந்தியா இடம் பெற்றுள்ள பி பிரிவில் இலங்கை அணி நல்ல ரன் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்திற்குவரப் போவது இந்தியாவா, வங்கதேசமா என்பதுதான் இப்போது முக்கியக் கேள்வி.
எனவே இன்றைய போட்டியில் இமாலாய ரன் விகிதத்தில் இந்தியா வெற்றி பெற்று, அடுத்த போட்டியில் இலங்கையையும் சூப்பர் ரன் ரேட்வித்தியாசத்தில் வென்றால்தான் சூப்பர் 8 சுற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.
இன்னொரு போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், ஜிம்பாப்வேயும் மோதவுள்ளன. கிங்ஸ்டனில் நடக்கும் இப்போட்டியில் மேற்குஇந்தியத் தீவுகள் அணி எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. மாறாக ஜிம்பாப்வே அணி, அயர்லாந்துடன் மோதிடை கண்டு, ஒரு புள்ளியுடன் சுமாரான நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றால், சூப்பர் 8 சுற்றுக்குத்தகுதி பெறும்.
மறுபக்கம் இதே பிரிவில் உள்ள அயர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக வைத்துள்ளது. இந்த அணியால்தான்பாகிஸ்தானின் கோப்பைக் கனவு தகர்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications