காந்தியை ஜெ அவமதித்து விட்டார்-இளங்கோவன்
சென்னை:அரசியல் லாபத்திற்காக உண்ணாவிரதம் இருந்து, மகாத்மா காந்தியடிகள் கடைப்பிடித்த உன்னதமான சத்தியாகிரக இயக்கத்தை அவமானப்படுத்திவிட்டார் ஜெயலலிதா என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சத்தியாகிரக நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உண்ணாவிரதம் போன்ற அறப் போராட்டங்களை நாட்டின்சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தியடிகள் கடைப்பிடித்தார். காங்கிரஸ் தலைவர்களும் சுதந்திரப் போராட்டத்திற்கான ஆயுதமாக அவற்றைப்பயன்படுத்தினர்.
பொது நலனை முன்னிட்டு அந்த அமைதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் நாட்டின் தந்தையான காந்தியடிகள் கடைப்பிடித்த அந்தஅமைதிப் போராட்டத்தை, மாபெரும் இயக்கத்தை, அவமானப்படுத்தி விட்டார் ஜெயலலிதா. அரசியல் லாபத்திற்காக, சத்தியாகிரகப்போராட்டத்தை அவமதித்து விட்டார்.
தமிழகத்தில் யாரும் காங்கிரஸ் கட்சியை தங்களது அடிமை என்று நினைத்து விடக் கூடாது. சில கொள்கைகளுக்காக காங்கிரஸ் கட்சிபொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. ஆனால் அந்த பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மக்கள் பிரச்சினைகளில் முதலில் வந்து நிற்பது காங்கிரஸ் கட்சிதான். அதிலிருந்து எப்போதும் நாங்கள் பின் வாங்க மாட்டோம். தமிழகத்தில்காமராஜர் ஆட்சி மலரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டும். இந்த லட்சியத்தை அடையும் நோக்கில் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல தலைவர் கிருஷ்ணசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முயற்சியில் அவருடன்சேர்ந்து செயலாற்ற, ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்.
பஞ்சாப் மாநில தேர்தலில் காங்கிரஸ் தோற்றதில் ஆச்சர்யம் இல்லை. தோல்வி காங்கிரஸுக்குப் புதிதில்லை. இதுபோல பல தோல்விகளை கட்சிசந்தித்துள்ளது. ஆனால் இதெல்லாம் மாறும். எதிர்காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டையே தனது சொந்த பலத்தால் காங்கிரஸ் ஆளும் காலம்வரும் என்றார் இளங்கோவன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications