நடுக்கடலில் கடற்படையினருடன் மீனவர்கள் மோதல்
அறந்தாங்கி:நடுக்கடலில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருடன் தமிழக மீனவர்கள் மோதலில் ஈடுபட்டானர்.
அறந்தாங்கி ஜெகதாபட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அன்பரசன், ஆறுமுகம் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலில் வலைவீசிமீன்பிடித்த அவர்கள் வலையில் எதிர்பார்த்த படி மீன்கள் சிக்கவில்லை.
இதையடுத்து இருவரும் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடிப்பு வலையை வீசினர். இரட்டை மடிப்பு வலை வீசினால் அதிக மீன் குஞ்சுகள்பிடிபடும். இதனால் கடலில் மீன்வளம் குறையும் என்பதால் இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த கடலோர பாதுகாப்பு படையினர் இரட்டை மடிப்பு வலை வீசக் கூடாது என எச்சரித்தனர். இதனால்மீனவர்களுக்கும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் இடையே நடுக்கடலில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் கடலில் விரிக்கப்பட்டிருந்த இரட்டை மடிப்பு வலைகளை அறுத்து விட்டு அவர்களை விசாரணைக்கு அழைத்துசென்றனர்.
விசாரணை முடிந்து திரும்பிய மீனவர்கள் நடுக்கடலில் நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மீனவர்களிடம் கூறினர். இதையடுத்து ஜெகதாபட்டினம்விசைப்படகு மீனவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைபட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்துவிசாரணை நடத்தப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர். மீனவர்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications