ஜெ.வுக்கு போட்டியாக மாண்டியாவில் போராட்டம்
மாண்டியா:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் போட்டியாக நேற்று கர்நாடக மாநிலம் மாண்டியாவில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கோரி ஜெயலலிதா நேற்று உண்ணாவிரதம் இருந்தார். 21ம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் போராட்டத்துக்குப் போட்டியாக நேற்று காவிரி மாவட்டமான மாண்டியாவில் விவசாயிகள் சங்கம் சார்பில்உண்ணாவிரதம் இருந்தனர்.
காவிரி ஹிதரக்ஷனா சமிதி என்ற அந்த அமைப்பின் தலைவர் மாதே கெளடா தலைமையில் சில்வர் ஜூப்ளி பூங்கா பகுதியில் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல ஜெயலலிதாவின் போராட்டத்தைக் கண்டித்து மைசூர்-பெங்களூர் மார்க்கத்தில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் நடந்தன.
நான்கு ரயில்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இதேபோல மைசூர்-பெங்களூர் எக்ஸ்பிரஸ்சாலையிலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல மைசூரிலும் போராட்டங்கள் நடந்தன. தீர்ப்பு வெளியான நாள் முதலாகவே மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய காவிரிப் பாசனமாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications