நல்ல உள்ளமும் நல்லாட்சியும்-கருணாநிதி
சென்னை:காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்தததுபோல 2 அடுக்கு பஞ்சாயத்து முறையை கொண்டு வர முயற்சி செய்வோம் என முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
நேற்று நடந்த உள்ளாட்சி தலைவர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்டு, உள்ளாட்சி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விளக்கும்நூல்கள், கையேடுகளை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்த கருத்தரங்கில் உங்கள் கருத்துகள் கூறி அதில் சில திட்டங்களாக உருப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளீர்கள். ஆனால் நான்இங்கே அவற்றை அறிவிப்பேன் என எதிர்ப்பார்க்க வேண்டாம்.
இன்னும் சில நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதை பற்றிய ரகசியங்களை வெளியிடக் கூடாது. நல்ல உள்ளம் இருந்தால்தான்நல்ல ஆட்சியை நடத்த முடியும். நல்ல எண்ணங்கள் மலர்ந்து நல்லாட்சியாக மாறி மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
ஒரு ஆலமரத்துக்க பல வேர்கள் தேவைப்படுவது போல் உள்ளாட்சி அமைப்புகள் கிளைகளாக இருக்கின்றன. வேர்கள் கிளைகள் தங்கள்கடமையை ஆற்றுவதால் மரம் செழித்து பயிரிட்டவர்களுக்கு பயனளிக்கிறது. வேர்கள் கோபித்தால் அடிமரம் நிலைக்காது. எனவே வேர்கள்கோபத்துக்கு ஆளாகாமல் உங்கள் ஆசையை விரைவில் பூர்த்தி செய்வோம்.
உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 30,000 மேற்பட்டவர்கள் பல பொறுப்புகளில் இருக்கிறீர்கள். அனைவரையும் ஒரு சேர பார்க்க வேண்டும்என்ற ஆசை எனக்கு உள்ளது. அது நிச்சயம் நிறைவேறும்.
மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்கும் நிலை குடியாட்சியில் தான் உண்டு. பழங்காலத்தில் குடவோலை முறை இருந்தது. யாரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற விதிமுறைகளும் இருந்தன. தேர்ந்தெடுப்பவர், நாணயமுள்ளவராகவும், பிறர் பொருளை ஆசை கொள்ளாதவராகவும்இருக்கவேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை காமராஜர் காலத்தில் 2 அடுக்கு பஞ்சாயத்து முறைதான் இருந்தது. இது சுலபமாக இருந்தது. ஆனால் பஞ்சாயத்து ராஜ்சட்டம் வந்த பிறகு அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டது. 2 அடுக்கு முறைகள் தான் வேண்டும். 3 அடுக்கு முறை தேவையில்லை என்றோம்.
ஆனால் அது ஏற்கப்படவில்லை. இப்போது 3 அடுக்கு முறை உள்ளது திருக்குறள் கூட ஈரடுக்குதான். அது போல உள்ளாட்சிகள் இருந்திடவேண்டும். அப்படிப்பட்ட நிலை ஏற்பட நாம் முயற்சி செய்ய வேண்டும். அதற்காக முயற்சிப்போம் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications