கருணா, இலங்கை அரசின் தொடர்புகள்:அம்பலப்படுத்தும் கடற்படை அதிகாரியின் மனைவி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளின் அதிருப்திப் பிரிவு தலைவர் கருணாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை கடற்படை அதிகாரி ரோகன கமகேவின் மனைவி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறி கடற்படை அதிகாரி கமகேவை, இலங்கை ரகசியப் பிரிவு போலீஸார் கடந்தசெவ்வாய்க்கிழமை கைது செய்தனர். ஆனால் கமகேவுக்கும், புலிகளுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என்று கமகேவின் மனைவி ரசிகாபிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

ஆனால், கருணா பிரிவுக்கும், அரசுக்கும் இடையில்தான் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல் முடிந்தவுடன், கருணாவை சந்தித்து, அரசுடன் ஒத்துழைத்து செயல்படுமாறு கேட்டுக் கொள்வதற்காக கமகேவை, அதிபர்ராஜபக்ஷேவின் தம்பியும், பாதுகாப்புத் துறை செயலாளருமான கோதபயா ராஜபக்ஷே தனது கணவரை மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்ததாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் சமயத்தில், வவுனியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த கமகவேை, அரசுக்கு ஆதரவானவர்களைத் திரட்டுமாறு கோதபயாராஜபக்ஷே கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கணவருக்கு எப்போதுமே அரசியலில் விருப்பம் இருந்ததில்லை.ஆனால் கோதபயா ராஜபக்ஷேதான், எனது கணவரை அரசியலில் சேருமாறும், அதிபர் ராஜபக்ஷேவுக்காக வவுனியாவில் பிரசாரத்தில்ஈடுபடுமாறும் வற்புறுத்தினார்.

எனது கணவரின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. இதற்காக எனது கணவருக்கு புதிய பொறுப்பையும் கோதபயா கொடுத்தார்.

எனது கணவர் அமைச்சர் சம்பிகா ரனவகாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர் மூலம்தான் கோதபயாவை அவர் சந்தித்தார்.

கடற்படை உளவுப் பிரிவின் இணை இயக்குநராக எனது கணவர் நியமிக்கப்பட்ட பின்னர் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை அவர் சிறப்பாகவேஆற்றினார். கடமை உணர்ச்சி மிகுந்தவர் அவர். நம்பிக்கையானவர், கெளரவமானவர். இதற்காக அவர் கடற்படை விருதையும் பெற்றார்.

அவர் கடமை தவறியராகவோ, நம்பகத்தன்மை இல்லாதவராகவோ இருந்திருந்தாலோ, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தாலோ இந்தவிருது கிடைத்திருக்குமா?

அரசு கேட்டுக் கொண்டதன் பேரில்தான் கருணாவை எனது கணவர் சந்தித்தார். இதுகுறித்து கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் தெரியும்.

எனது கணவர் அரசுக்காகவும், நாட்டுக்காகவும்தான் பணியாற்றினார். விடுதலைப் புலிகளுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டவர் அவர். புலிகளை எதிர்த்து புத்தகம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

ஆனால் இப்போது அவர் மீது புலிகளுக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இது அபத்தமானது, அநியாயமானது.

இப்போது எனக்கும், எனது இரு குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனதுகணவர் கைது செய்யப்பட்ட பின்னர் எனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்குக் கூட அனுப்ப முடியவில்லை. பயத்துடன் நாங்கள் வாழும் நிலைஏற்பட்டுள்ளது.

வவுனியா மற்றும் அனுராதபுரத்தில் உள்ள எங்களது வீட்டுக்குக் கூட எங்களால் போக முடியவில்லை. எனது கணவர் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்என்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. இப்போது அனைவருக்கும் தெரிந்து விட்டதால் எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

நான் வவுனியாவில் பிறந்தவள் என்றாலும் கூட எனது பெற்றோரும், நானும் சிங்களர்கள்தான். ஆனால் தமிழர் பகுதியைச் சேர்ந்தவள் என்பதாலும்,தமிழர்களுடன் அதிகம் நெருங்கிப் பழகியவள் என்பதாலும் என் மீதும், எனது கணவர் மீதும் இப்போது சந்தேக முத்திரை விழுந்து விட்டது.

உண்மையில் விடுதலைப் புலிகளால் எங்களுக்கு எப்போதுமே ஆபத்து இருந்து வந்தது என்றார் ரசிகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+