காவிரி: கட்சிகளுக்கு வக்கீல்கள் கருத்தின் நகல்
சென்னை:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட 90 நாட்கள் காத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து உச்சநீதிமன்றவழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களின் நகல்களை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழக அரசு அனுப்பியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகிறதுஅதிமுக. அதன் கூட்டணிக் கட்சிகளும் இதைக் கோரி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தித்தான் நேற்று ஜெயலலிதா சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவதில்சட்ட சிக்கல் உள்ளது. அப்படி வெளியிட்டு விட்டால் அதுவே இறுதித் தீர்ப்பாகி விடும், அதை எதிர்த்து யாரும் முறையீடு செய்ய முடியாது என்றுதமிழக அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட 90 நாட்கள் காத்திருக்க வேண்டியது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்பராசரன், பி.பி.ராவ் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்க நகலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழக அரசு அனுப்பிவைத்துள்ளது.
பராசரன் அளித்துள்ள விளக்கத்தில் பல்வேறு சட்ட பிரிவுகளை மேற்கோள் காட்டி நீண்ட விளக்கம் தந்துள்ளார். அதில், 3 மாத காலம்முடிவடைவதற்கு முன், பன்மொழி மாநில நதி நீர் தாவா சட்டம், பிரிவு 6ன்படி, நடுவர் மன்றத் தீர்ப்பினை அறிவிக்கை செய்யும்படி கேட்பது,பிரச்சினையில், சம்பந்தப்பட்ட எந்த மாநில அரசுக்கும் பொருத்தமான செயலாக இருக்காது.
அந்த சட்டப்பிரிவு 5(3)ல் குறிப்பிட்டுள்ளபடி நடுவர் மன்றத்திடம் மனு செய்து கொள்வதற்கான காலம் முடிவடைவதற்கு முன்பு, பிரிவு 6ன்படிஉடனடியாக அறிவிக்கை செய்வதை மத்திய அரசு தனது கடமையாக செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
வழக்கறிஞர் பி.பி. ராவ் அளித்துள்ள விளக்கத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications