சூரிய கிரகணம்-நாடு முழுவதும் கோவில்கள் மூடல்
சென்னை:இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இந்திய நேரப்படி காலை 6.08 மணி முதல் 9.55 மணி வரை இந்த கிரகணம் நீடித்தது. இதனை மத்திய ஆசியா, கிழக்காசியா மற்றும் அலாஸ்காஆகிய பகுதிகளில் காண முடிந்தது.
இந்தியாவில் இதை பாதியளவே காண முடிந்தது. இந்தியாவில் இன்று காலை 6.45 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 7.23 வரை நீடித்தது.
இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதால் தொலைநோக்கி உதவியுடன் மக்கள் இதைப் பார்த்து ரசித்தனர். இந்தஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறுவர், சிறுமியர்உள்பட ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தனர்.
இதற்காக நான்கு தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 2,500 பேர் வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் சூரியகிரகணத்தைப்பார்த்தனர்.
டெல்லியில் சூரிய கிரகணம் 57.3 சதவீதம் தெளிவாகத் தெரிந்தது. சென்னையில் 24.6 சதவீதமே தெரிந்தது.
இன்னும் ஒரு சூரிய கிரகணம் இந்த ஆண்டே ஏற்படவுள்ளது. அதன் பின்னர் 2043ம் ஆண்டு முழு அளவிலான சூரிய கிரகணம் நிகழவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர் கோட்டில் வருவதே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் சூரியனை சந்திரன்மறைக்கிறது.
கோவில்கள் மூடல்:
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை மூடப்பட்டிருந்தன.
அதேபோல சபரிமலை அய்யப்பன் கோவில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்களின் நடையும் காலை 8 மணி வரைமூடப்பட்டிருந்தன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications