திருச்சி: நவீன துப்பாக்கிகள், லாஞ்சர்கள் தயாரிப்பு
திருச்சி:திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் அதி நவீன துப்பாக்கிகள் மற்றும் லாஞ்சர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகமும் (டி.ஆர்.டி.ஓ), திருச்சி ஆயுதத் தொழிற்சாலையும் இணைந்து இந்த நவீன துப்பாக்கிகள் மற்றும்லாஞ்சர்களைத் தயாரிக்க உள்ளன.
முதல் கட்டமாக நான்கு வகை அதி நவீன ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியப் பாதுகாப்புப் படையின் பயன்பாட்டுக்காக இவைதயாரிக்கப்படவுள்ளன.
14.5 எம்.எம். மற்றும் 20 எம்.எம். வகை வித்வன்சக் என்று பெயரிடப்பட்டுள்ள துப்பாக்கிகள், 40 எம்.எம். மல்டி கிரனேட் லாஞ்சர், 38 எம்.எம்.லாஞ்சர் ஆகியவை தற்போது உருவாக்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களாகும். இதுதவிர 40 எம்.எம். பேரல் கிரனேட் லாஞ்சரும்உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களை விட இவை மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கப்படவுள்ளன.
14.5 எம்.எம் துப்பாக்கியால் 1,800 மீட்டர் தொலைவிலான இலக்கை சுட முடியும். 20 எம்.எம் துப்பாக்கியால் 1,300 மீட்டர் தொலைவில் உள்ளஇலக்கை குறி பார்த்து சுட முடியும்.
இந்த துப்பாக்கிகள் மூலம் எதிரிகளின் பதுங்கு குழிகள், ரேடார் கருவிகளை சுட்டுத் தகர்க்க முடியும்.
கடந்த மாதம் இவற்றின் தயாரிப்பு தொடங்கியது. எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 100 துப்பாக்கிகளைத் தயாரித்துக் கொடுக்க தற்போது ஆர்டர்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு இந்த ஆயுதங்களை கொடுப்பதற்கு முன்பு பல்வேறு கட்டத்தில் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
40 எம்.எம். மல்டி கிரனேட் லாஞ்சர் (இதன் பெயர் உக்ரா-40) மூலம், நிமிடத்திற்கு 12 சுற்று சுட முடியும். 375 மீட்டர் தொலைவிலான இலக்கைதாக்கித் தகர்க்க முடியும். ஒரு அடி அகலம் கொண்ட சிமென்ட் சுவரையும் கூட துளைத்தெடுக்கும் வகையிலான திறன் படைத்தது.
தீவிரவாதிகள், நக்சலைட் வேட்டைக்கு இந்த லாஞ்சர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த வகை நவீன ஆயுதங்களை தயாரித்துத் தருமாறு கடற்படையும், ராணுவமும் கோரியுள்ளன. அடுத்த ஆண்டு முதல் இவற்றுக்கான தயாரிப்புதொடங்கவுள்ளதாக திருச்சி ஆயுதத் தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications