போலி பாஸ்போர்ட்டுகளுடன் இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஓமன், மலேசியாவுக்கு செல்ல முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (30) என்பவர் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி மலேசியாவுக்கு செல்ல முயன்றார். அவரதுபாஸ்போர்ட்டைப் பரிசோதித்துப் பார்த்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அது போலியானது என்பதைக் கண்டறிந்து போலீஸாரிடம்ஒப்படைத்தனர்.
இதேபோல, வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த பூபாலன் (28) என்பவரும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஓமன் செல்லதிட்டமிட்டு இருந்தார். அவரும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications