விவசாய நிலங்களை கையகப்படுத்த கம்யூ எதிர்ப்பு
சென்னை:சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக விவசாய நிலங்களை அரசே முன்னின்று கையகப்படுத்த கூடாது. அதை சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விவசாயிகள் நல்வாழ்வைப் பாதுகாக்க ஏப்ரல் 10ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடுமுழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதில் 2 குழுக்கள் பங்கேற்கின்றன.
கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் தலைமை தாங்குகிறார்.இதை நான் தொடங்கி வைக்கிறேன்.
இதே நாளில் ஊட்டியிலிருந்து புறப்படும் குழுவுக்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் தலைமை தாங்குகிறார். இதைநல்லக்கண்ணு தொடங்கி வைக்கிறார்.
இதன் கடைசி நாளான 27ம் தேதி பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது. முடிவில் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கை சம்பந்தப்பட்ட மனுமுதலமைச்சரிடம் கொடுக்கப்படும். இதற்காக 1 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெறப்படுகிறது.
விவசாயிகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும். விவசாய நிலங்களை தொழில் தொடங்குவதற்காக பயன்படுத்தக்கூடாது. சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு தேவையான நிலங்களை அரசே முன்னின்று கையகப்படுத்தக் கூடாது. சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நிலத்தை தெரிவு செய்து அவற்றை பெற முனைய வேண்டும்.
விவசாயத் தொழிலாளர் அனைவருக்கும் தனித்தனியாக அடையாள அட்டை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று நான் கூறியது ஒரு ஆலோசனையே தவிர நிபந்தனை அல்ல.இந்த விழிப்புணர்வு பேரணி அரசுக்கு எதிரானது அல்ல என்றார் பாண்டியன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications