திமுகவை விமர்சிக்க பாமகவினருக்கு ராமதாஸ் தடை
சென்னை:திமுக குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் பாமகவினர் யாரும் விமர்சித்துப் பேசக் கூடாது என்று அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தடைவிதித்துள்ளார்.
சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதும், மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.இதற்குப் பதிலளித்த வீரபாண்டி ஆறுமுகம், பாமகவுக்கு மேற்குப் பகுதியில் முகவரி கொடுத்ததே திமுகதான் என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.
இதனால் பாமக, திமுக இடையிலான மோதல் சூடு பிடித்துள்ளது. நிலைமை மோசமாவதை உணர்ந்த ராமதாஸ், சம்பந்தப்பட்ட 3எம்.எல்.ஏக்களையும் அழைத்து விசாரித்தார்.
அப்போது எதுவாக இருந்தாலும் திமுக குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் எந்த விமர்சனத்தையும் வெளியிட வேண்டாம் என்றும் அமைதிகாக்குமாறும் அந்த எம்.எல்.ஏக்களிடம் ராமதாஸ் கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், சேலம் மாவட்ட பாமக எல்.எல்.ஏக்கள் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினர். தாங்கள்தொடர்ந்து அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படுவதாக அப்போது குமுறல் வெளியிட்டனர்.
திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகும் எண்ணத்தில் அவர்கள் பேசவில்லை. தங்களது ஆதங்கத்தையே வெளியிட்டிருந்தனர். பின்னர்அவர்களிடம் ராமதாஸ் பேசுகையில், எக்காரணம் கொண்டும் ஆளுங்கட்சியினர் குறித்து விமர்சிக்க வேண்டாம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்என்னிடம் கூறுங்கள் என்றார் என்று தெரிவித்தார் மணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications