மே.இ. தீவு வெற்றி: திணறடித்த ஜிம்பாப்வே
கிங்ஸ்டன்:ஜிம்பாப்வே வீரர்களின் சிறந்த ஆட்டத்தை சமாளித்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
டி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், ஜிம்பாப்வேயும் கிங்ஸ்டனில் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வேஅணி, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை சமாளித்து சிறப்பாக பேட் செய்தனர்.
ஆரம்பத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும் சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு பெரும் மிரட்டலாகவிளங்கினார்.
டெய்லர் சிறப்பாக ஆடி 50 ரன்களைக் குவித்தார். சீன் வில்லியம்ஸ் விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்களைச்சேர்த்து அணியை பலப்படுத்தினார். அவருக்குத் துணையாக சிகும்பராவும் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 30 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். கெய்ல் 40 ரன்களும், சந்தர்பால் 21 ரன்களும்சேர்த்து ஆட்டமிழந்தனர்.
ராம் நரஷ்ே சர்வான் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மர்லான் சாமுவேல்ஸ் 28 ரன்களைச் சேர்த்தார். கேப்டன் லாரா சிறப்பாக ஆடி 44ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக பிரேவோ சிறப்பாக ஆடி 37 ரன்களை எடுத்தார்.
4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 47.5 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 204 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஏற்கனவே பாகிஸ்தானை வென்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சிறப்பாக ஆடிய ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications