உல்மர் கொலை செய்யப்பட்டது உறுதியானது-ஸ்காட்லாந்து போலீஸ் வருகை-தாவூத் காரணம்?

Subscribe to Oneindia Tamil

கிங்ஸ்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக ஜமைக்கா போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து உல்மரைக் கொன்றிருக்க வேண்டும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். நிழல் உலக தாதா தாவூத்இப்ராகிம்தான் இந்த கொலையின் பின்னணியில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாப் உல்மர் மர்ம மரணத்திற்கு கடைசியில் விடை கிடைத்துள்ளது. அவர் இயற்கையாக இறக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து கழுத்தைநெரித்துக் கொலை செய்துள்ளனர் என்று ஜமைக்கா போலீஸார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிங்ஸ்டனில் ஜமைக்கா காவல்துறை துணைத் தலைவர் மார்க் ஷீல்ட்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், செயற்கையான முறையில்ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக பாப் உல்மர் மரணமடைந்துள்ளார். அவரது கழுத்து எலும்பு முறிபட்டு, உடைந்துள்ளது. இது இயற்கையானதுஅல்ல.

ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்திருக்க வேண்டும். உல்மர் திடமான உடல் வாகு கொண்டவர் என்பதால் அவரைப்போல உடல் பலம் மிக்கவர்கள்தான் இதில் ஈடுபட்டிருக்க முடியும். விரைவில் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துவோம்.

ஹோட்டலில் வெளியாட்கள் யாரும் அத்துமீறி நுழைந்ததாக தகவல் இல்லை. ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள டிவி கேமராக்களை தீவிரமாகஆய்வு செய்து வருகிறோம். அவை அனைத்தும் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாப் உல்மரின் உடலில் வெளிப்புறமாக எந்தக் காயமும் தெரியவில்லை. கழுத்து நெரிபட்ட காயத்தைத் தவிர வேறு பெரிய காயமும் அவரதுஉடலில் இல்லை.

கொலையாளிகள் தாங்களாகவே சரணடைய வேண்டும். கொலையாளிகள் குறித்து தகவலை பொதுமக்களும் தெரிவிக்கலாம்.

சூதாட்டாக்காரர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தையம் நாங்கள் கைவிட்டு விடவில்லை. அனைத்துக்கோணங்களிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார் ஷீல்ட்ஸ்.

ஸ்காட்லாந்து போலீஸ் வருகை:

பாப் உல்மர் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உதவியை ஜமைக்காநாடியுள்ளது. ஏற்கனவே ஸ்காட்லாந்து யார்டு உளவு அதிகாரி ஒருவர் ஜமைக்காவுக்கு வந்துள்ளார். தற்போது மேலும் சிலர்வரவழைக்கப்படவுள்ளனர்.

ஸ்காட்லாந்து அதிகாரிகள் வந்தவுடன் விசாரணை வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி. அதிர்ச்சி:

உல்மர் கொலை செய்யப்பட்டது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலர் தலைவர் மால்கம் ஸ்பீட் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாப் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினின் சோகத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம்.

பாப் கொலையால் உலகக் கோப்ப்ை போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. அது தொடர்ந்து நடைபெறும்.

பாப் கொலை தொடர்பாக காவல்துறையினரின் விசாரணைக்கு முன்னாள் லண்டன் காவல்துறை ஆணையர் பால் காண்டனும் ஒத்துழைக்கவுள்ளார்.கிரிக்கெட்டில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்கனவே ஐசிசியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் காண்டன் என்றார் ஸ்பீட்.

இதற்கிடையே, ஜமைக்கா காவல்துறையினரின் விசாரணைக்கு உதவத் தயார் என பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் லண்டன்காவல்துறையிலிருந்து தகவல் போயுள்ளதாம். இருப்பினும் தற்போதைக்கு ஜமைக்கா காவல்துறை இதுதொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதிர்ச்சியில் பாக் வீரர்கள்:

உல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட தகவல் உறுதியாகியுள்ளது பாகிஸ்தான் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கிங்ஸ்டனிலிருந்து மாண்டிகோ பே நகருக்கு இடம் பெயர்ந்துள்ள அவர்களிடம் உல்மர் கொலைச் செய்தி பெரும் அதிர்ச்சி அலைகளைப்பரப்பியுள்ளது.

இந்த செய்தி தங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எங்களது அணியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த சோகத்தையும்,துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அணியின் மேலாளர் பர்வேஸ் மிர் கூறியுள்ளார்.

தாவூத் கும்பல் காரணம்?

இதற்கிடையே, தாவூத் இப்ராகிம்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று அவனது முன்னாள் கூட்டாளியான பப்பு ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

தாவூதின் முன்னாள் கூட்டாளி பப்லு. சிபிஐயால் கைது செய்யப்பட்ட பப்லு தற்போது உ.பி. மாநிலம் பரேலி மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக பப்லு லக்னோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது பாப் உல்மர் கொலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார் பப்லு. அவர் கூறுகையில், தாவூத் இப்ராகிம்தான் இந்த கொலைக்குக்காரணம். உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாகவே, பாகிஸ்தான்-அயர்லாந்து போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது.

ஆனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் தோற்றுப் போனது. இதனால் அயர்லாந்துப்போட்டியில் விளையாடி வெற்றி பெற்று விடலாம் என்று சில வீரர்கள் கூறினர்.

ஆனால் அணியில் உள்ள ஒரு முக்கிய நபர் அதை ஏற்கவில்லை. தாவூத் பேச்சை மீறினால் என்ன நடக்கும் என்று தெரியும் என்பதால் அந்தரிஸ்க்கே வேண்டாம் என்று அவர் கூறி விட்டார்.

இந்த சூதாட்ட விவரங்கள் அனைத்தும் உல்மருக்குத் தெரிய வந்திருக்கும். எனவேதான் அவர் பேசினால் பிரச்சினையாகி விடும் என்பதால் கொலைசெய்து விட்டனர். தாவூத்தான் இந்தக் கொலைக்கு முழுக் காரணமும் என்று கூறினார் பப்லு.

மும்பை தொடர் குண்டு வெடிப்பிலும் தாவூத்தான் முக்கியக் குற்றவாளி. பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் தாவூத்தைப் பிடிக்க இந்தியாபலமுறை மு.யன்றும் பாகிஸ்தான் பிடிகொடுக்காமல் தாவூத்தைக் காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் பாப் உல்மர் கொலையில் தாவூத் பெயர்அடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+