மே 10ல் சட்டசபையில் கலாம் பேசுகிறார்!
சென்னை:முதல்வர் கருணாநிதி சட்டசபையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைப் பாராட்டும் வகையில், நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவின் ஒருபகுதியாக மே 10ம் தேதி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சட்டசபையில் உரை நிகழ்த்தவுள்ளார்.
முதல்வர் கருணாநிதி சட்டசபை உறுப்பினராக 50 ஆண்டுகளைத் தொட்டுள்ளார். இதுவரை ஒரு சட்டசபைத் தேர்தலிலும் கூட அவர் தோல்வியைத்தழுவியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து முதல்வரைப் பாராட்டிக் கெளரவிக்க சட்டப்பேரவையில் கலைஞர் என்ற தலைப்பில் பொன்விழா எடுக்க தீர்மானிக்கப்பட்டு,நிதியமைச்சர் அன்பழகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தக் குழு கூடி பொன்விழாவின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சட்டசபைக்கு வரவழைத்து உரை நிகழ்த்த வைக்கமுடிவு செய்யப்பட்டது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை சென்னைக்கு அழைத்துபிரம்மாண்டக் கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சட்டசபைக்கு வந்து உரை நிகழ்த்துமாறு கோரி தமிழக அரசு சார்பில், குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், மே 10ம் தேதி அவர் சட்டசபையில் உரை நிகழ்த்துவார் என்றும் சபாநாயகர்ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பட்ஜெட் மீதான விவாதம் 26ம் தேதிதொடங்கும். 30ம் தேதி உறுப்பினர்களின் விவாதங்களுக்கு நிதியமைச்சர் அன்பழகன் பதில் அளிப்பார்.
பல்வேறு துறை மானியக் கோரிக்கைகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் எடுத்துக் கொள்ளப்படும். முதலில் மின்துறை மானியக் கோரிக்கைவைக்கப்படுகிறது. வேளாண்துறை மானியக் கோரிக்கை ஏப்ரல் 3ம் தேதியும், நீர்ப்பாசனத் துறை கோரிக்கை 4ம் தேதியும், பள்ளிக் கல்வித்துறை10ம் தேதியும், சட்டம் 13ம் தேதியும், காவல்துறை 20ம் தேதியும், உயர் கல்வித்துறை மே 2ம் தேதியும், தொழில்துறை மே 7ம் தேதியும் எடுத்துக்கொள்ளப்படும்.
மே 10ம் தேதியும், 11ம் தேதியும் முதல்வரின் 50 ஆண்டு கால சட்டமன்ற சாதனையைப் பாராட்டி விழா நடைபெறுகிறது. 10ம் தேதி காலை 9.30மணிக்கு வழக்கம் போல சபை கூடும். பின்னர் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு முதல்வர் கலைஞரைப் பாராட்டி பேசுகிறார்.
11ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல்வரைப் பாராட்டி பேசுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த நமது குடியரசுத் தலைவர், தமிழக சட்டசபையில்முதல்வரைப் பாராட்டி பேசுவது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதுஎன்றார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications