கிரிக்கெட் பெட்டிங்: மும்பையில் 25 பேர் கைதுசென்னையில் 3 பேர் சிக்கினர்- 3 பேருக்கு வலை
மும்பை/ சென்னை:இந்தியா, இலங்கை இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பான சூதாட்டத்தில் ஈடுபட்ட 25கிரிக்கெட்சூதாட்டம் தொடர்பாக நாடு முழுவதும் 25 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 3 பேர் சிக்கினர். 3பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முக்கியப் போட்டியின் முடிவில் மும்பை போலீஸார்சூதாட்டக்காரர்களைப் பிடிக்க செம்பூர், டார்டியோ ஆகிய இரு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தசோதனையில் 25 பேர் பிடிபட்டனர்.
செம்பூரில் உள்ள நியூ ஆர்த்தி சோஷியல் குழுமத்திற்குச் சொந்தமான ஒரு ஷாப்பிங் வளாகத்தில் சூதாட்டத்தில்ஈடுபட்டிருந்த 24 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வளாகத்தின் உரிமையாளரான கிருஷ்ணன் நாயர்தலைமறைவாகி விட்டார்.
இந்த சோதனையில் 11 செல்போன்கள், ஒரு டிவி, 93 ஆயிரத்து 43 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டது.
டார்டியோவில் உள்ள வாஸ்துசில்ப் என்ற கட்டடத்தில் நடந்த சோதனையில் சைலஷ்ே போஹாரா என்பவர்கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ரூ. 70 ஆயிரம் பணம், 4 செல்போன்கள், 2 டிவி பெட்டிகள், ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம்மதிப்புள்ள பத்திரங்கள் பிடிபட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் 3 பேர் கைது:
இதேபோல, சென்னையில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர்பாக சூதாட்டம் நடப்பதாக நாக்பூர்போலீஸார் சென்னை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். எந்த இடத்தில் சூதாட்டம் நடக்கிறது என்பதையும்அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து புரசைவாக்கம் பகுதியில் உள்ள டவ்டன் என்ற இடத்திற்கு போலீஸார் விரைந்தனர். அங்குள்ளஒரு காபி கிளப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்ட்டத்தில் ஈடுபட்டிருந்தகிருஷ்ணா, ஜோகி, நந்தகோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சஞ்சய், பிரகாஷ், சைலேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆன்லைன்மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சுதாட்டம் தொடர்பாக நாக்பூரில் பிடிபட்ட ஒரு சூதாட்டாக்காரர்கொடுத்த தகவலின் பேரில் இந்த மூன்று பேரும் பிடிபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications