விமான தாக்குதல் தொடரும்-புலிகள் எச்சரிக்கை
வன்னி:தங்களது விமான தாக்குதல் தொடரும் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில்,
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள், காட்டுநாயகே விமானப்படை தளத்தை நள்ளிரவு 12.45 மணிக்கு தாக்கி சேதப்படுத்தியது.
தாக்குதலுக்கு பின்னர் அவை இரண்டும் பத்திரமாக வன்னிக்குத் திரும்பி விட்டன. இலங்கை விமானப்படையின் கேஃபிர், மிக் ரக விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் ஓடுதளம் ஒன்று சேதமடைந்து விட்டது.
விரைவில் ராணுவ நிலைகள் மீதும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இது தீடீர் தாக்குதல் அல்ல, திட்டமிட்ட தாக்குதல். தமிழ் மக்களைக் காக்க நடத்தப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதல் தொடரும். இதை விட வலுவான தாக்குதல்களை நாங்கள் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications