புலிகள் தாக்குதல்-சென்னைக்கு திருப்பி விடப்பட்ட கொழும்பு விமானங்கள்
கொழும்பு:விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து தாற்காலிகமாக கொழும்பு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதால் பல விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
இலங்ைக விமானப் படை தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குவது இது முதல் முறையல்ல. ஆனால், விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.கடந்த 2003ம் ஆண்டிலும் காட்டு நாயகே சர்வதேச விமான நிலையத்தை விடுதலைப் புலிகள் தாக்கி பெரும் சேதம் விளைவித்தனர்.
பல பயணிகள், ராணுவ விமானங்களை குண்டுகள் வைத்து தாக்கி அழித்தனர்.
இந் நிலையில் இப்போது விமானங்களைக் கொண்டு புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் இலங்கையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புலிகளிடம் போர் விமானங்கள் உள்ளதாகவும் வன்னி காட்டுப் பகுதியில் விமான தளத்தை அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டாலும் இதுவரை அந்த செய்திகள் உறுதி செய்யப்படவில்ைல.
புலிகளும் விமானங்களை இதுவரை தாக்குதலுக்கு பயன்படுத்தியதில்லை.
இப்போது தான் முதன் முறையாக தாக்குதலுக்கு புலிகளின் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சமீபகாலமாக இலங்கை ராணுவம், கடற்படை, விமானப் படைகளின் கூட்டு தாக்குதலால் புலிகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளனர். பல நிலைகளையும் இழந்துள்ளனர்.
இந் நிலையில் தான் முதன் முறையாக தங்களது விமானங்களைக் கொண்டு புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் இலங்கை அரசுக்கு பீதியையும் இந்தியாவுக்கு பெரும் கவலையும் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications