பண்ருட்டி பேச்சைக் கேட்டு உளரும்விஜய்காந்த்: கருணாநிதி கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலாற்று பிழைகளின் வல்லுனராக திகழும் ஒருவரை வாத்தியராக கொண்டு வாய் நீளம் காட்டி வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல என தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸுடன் சேர்த்து தற்போது விஜயகாந்த்துக்கும், கருணாநிதிக்கும் இடையிலும் அறிக்கைப் போர், வார்த்தைப் போர் படு சூடாக நடந்து வருகிறது.

திமுகவில் குடியேறியவர் என்று விஜயகாந்த் சொல்லப் போக, குடி உள்ளே போனதால் அப்படிப் பேசுகிறார் என விஜயகாந்த்தை கருணாநிதி வாரினார். இதற்கு பதிலடி கொடுத்து நேற்று விஜயகாந்த் காட்டமாக ஒரு அறிக்கை விட்டார்.

இதற்கு இன்று மறு பதிலடி கொடுத்துள்ளார் கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அனைத்து பிரிவினரும் ஆறுதல் பெறக்கூடிய நிதிநிலை அறிக்கையை இந்த அரசு வழங்கியுள்ளதை கண்டு சில எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் எந்த தகவலும் இல்லை என ஒரு நாளேட்டில் வந்துள்ளது. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பிப்ரவரி 25ம் தேதி தொடங்கப்பட்டது.

இதே போல் மற்றொரு திட்டமும் மத்திய அரசின் உதவியுடன் மாமல்லபுரம் சாலையில் அமைக்கப்படவுள்ளது.

இது எப்படி இருக்கிறதென்றால், மறைந்த தோழர் பார்த்தசாரதி எழுதிய திமுக வரலாறு ஏட்டில் அண்ணா தொடங்கிய திமுகவில் கருணாநிதி இடம் பெறவில்லை என பண்ருட்டி பேச்சைக் கேட்டு ஒருவர் உளருகிற பைத்தியகாரத்தனம் போல இருக்கிறது.

அந்த புத்தகத்தில் 109ம் பக்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் அண்ணா துரை, நெடுஞ்செழியன், மதியழகன், மு.கருணாநிதி, நடராசன், ஈ.வி.கே.சம்பத், பார்த்தசாரதி என தொடரும்.

இது மட்டுமல்லாது,நெடுஞ்செழியன் எழுதிய கண்டதும் கேட்டதும் என்ற புத்தகத்தில் 177ம் பக்கத்தில் அண்ணா அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியமானவர்கள் மட்டும் வருமாறு எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வரலாறு எல்லாம் அப்போது இளைஞனாக மின்வாரியத்தில் பொறியாளராக இருந்தவருக்கு தெரியாது. இப்படிப்பட்ட ஒருவரை வாத்தியராக கொண்டு வாய் நீளம் காட்டி வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல.

அவசரப்படும் பத்திரிக்கை ஆசிரியருக்கு சொல்லும் சரித்திரக் குறிப்பை ஆவேசப்படும் நண்பருக்கும் உண்மைகளை சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பச்சை பொய்களை தங்கள் போர்க் கணைகளாக ஆக்குகிறார்கள். இதை நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்களில் திமுகவினர் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+