ஒத்துக்கறேன், நான் பச்சப் புள்ளதான்.. ஆனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தை குடிப்பது பால்தான். அது பேசும் மழலை உளறலாகத் தான் இருக்கும். மற்றவர்களுக்கு அது இனிமையாகத் தெரியும். என்னைப் பற்றி ஜெயலலிதா அறிக்கை விட்ட போது அது அநாகரிகம் எனக் கருதினேன். ஆனால் இன்று கருணாநிதியும் அதே கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்று முதல்வர் கருணாநிதிக்கு பதில் கொடுத்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

குடி உள்ளே புகுந்ததால் உளறுகிறார் விஜயகாந்த். இவரை நம்பாதீர்கள் என சமீபத்தில் விஜயகாந்த்தை முதல்வர் கருணாநிதி கடுமையாக சாடியிருந்தார். தற்போது கருணாநிதிக்கு பதில் அளித்து அறிக்கை விட்டுள்ளார் விஜயகாந்த்.

அதில், பெற்ற தாய்க்குத் தான் பிரவசம் பற்றி தெரியும். சுற்றி இருப்பவர்களுக்கு தெரியாது. அதுபோல திமுகவை நிறுவிய அண்ணாவுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும். கருணாநிதிக்கு தெரிய நியாயமில்லை.

நான் அரசியலுக்கு பச்சைக் குழந்தைதான், அரசியல் வரலாறு தெரியாதது தான். ஆனால், வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள முடியும். என்னை பச்சைக் குழந்தை என்கிறார் கருணாநிதி, குடி புகுந்ததால் உளறுகிறார் என்கிறார்.

குழந்தை குடிப்பது பால்தான். அது பேசும் மழலை உளறலாகத் தான் இருக்கும். மற்றவர்களுக்கு அது இனிமையாகத் தெரியும். என்னைப் பற்றி ஜெயலலிதா அறிக்கை விட்ட போது அது அநாகரிகம் எனக் கருதினேன். ஆனால் இன்று கருணாநிதியும் அதே கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கருணாநிதி கல்லெறிய வேண்டாம் என கூறியுள்ளார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+