திருவாரூர்: போட்டி தேரோட்டம் நடத்த முயன்ற இல.கணேசன், 500 பாஜகவினர் கைது
திருவாரூர்:திருவாரூரில் காவல்துறை தடை உத்தரவை மீறி போட்டி தேரோட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில தலைவர் இல.கணேசன் தலைமயிலான 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவில் மிகவும் பிரசித்த பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் ஆழித்தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆழித் தேரோட்டம் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் ஆயில்யம் நட்சத்திர நாளன்றுதான் தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்று பாஜக கூறியது. அதை ஏற்க மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டது.
இதையடுத்து ஆயில்ய நட்சத்திர நாளான இன்று போட்டி தேரோட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. போட்டித் தேரோட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
மேலும், திருவாரூரில் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதிக அளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டனர். பாஜகவினர் தயாரித்து வைத்திருந்த மாதிரி தேரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருவாரூரில் மாநில பாஜக தலைவர் இல.கணேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர்.
அனைவரும் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications