வைகோ குறித்த பேச்சு: காங்-மதிமுக எம்எல்ஏக்கள் அடிதடிக்கு முயற்சி
சென்னைமதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய கருத்தால் மதிமுக எம்.எல்.ஏக்கள் கோபமடைந்தனர். அவர்களை அடிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசன் பேசுகையில், ஈழத் தமிழர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கையில் ஈடுபட ேவண்டும்.
எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் விரோதமான நடவடிக்கையில் மதிமுக ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஈடுபடவும் செய்யாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், வைேகா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் மதிமுக உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர்
சுதர்சனம் பேசிய கருத்துக்குப் பதில் கூற இளவரசன் எழுந்தார். ஆனால் அவரைப் பேச விடாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். போளூர் வரதன் எழுந்து, வைகோ குறித்து ஒரு கருத்தைக் கூறினார். இதற்கு மதிமுகவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்ேடார் வீர இளவரசனை நோக்கி அடிக்கப் போவது போல பாய்ந்தனர்.
இதனால் அவையில் பெரும் அமளியும், பரபரப்பும் ஏற்பட்டது. அருகில் இருந்த பிற கட்சிகளின் உறுப்பினர்கள் இரு தரப்பினரையும் அைமதிப்படுத்தி அமர வைத்தனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications