12 வயது சிறுசுகள் போட்ட கடத்தல் நாடகம்
சென்னை:சென்னை நகரை சுற்றிப் பார்க்க சைக்கிளில் கிளம்பிய 3 சிறுவர்கள், பஸ்சில் ஏறி பாதை மாறி வேறு பகுதிக்குப் போய் விட்டதால், பயத்தில் தங்களைக் கடத்தி விட்டதாக பெற்றோரிடம் நாடகமாடி போலீஸாரிடம் சிக்கினர்.
சென்னை அடையார் பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த தண்டபானி என்பவரின் மகன் சுரேந்திரன், திருவான்மியூர் பாண்டியன் என்பவரின் மகன் உதயசங்கர், கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த மாணிக்கத்தின் பாண்டியன் ஆகியோர் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். 3 பேருக்கும் 12 வயதாகிறது.
புதன்கிழமை இரவு சைக்கிளில் மூன்று பேரும் அப்படியே ஹாயாக கிளம்பினர். சென்னை நகரம் இரவில் ஜொலி ஜொலிக்கும் என்று கேள்விப்பட்டிருந்ததால் அதைப் போய் பார்த்து ரசித்து விட்டு வரலாம் என அவர்கள் கிளம்பினர்.
ஆனால் வழியில் சைக்கிள் பஞ்சராகி விட்டது. இதையடுத்து மூன்று பேரும் சைக்கிளை ரோட்டோரம் போட்டு விட்டு பூந்தமல்லி செல்லும் பஸ்சில் ஏறி விட்டனர். கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டபோது, பஸ்சின் போர்டில் எழுதப்பட்டிருந்த குமணன் சாவடி என்ற பெயரைப் பார்த்து விட்டு அங்கு கொடுங்க என்று கேட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு பஸ்சில் அமர்ந்தனர்.
குமணன் சாவடி வந்தவுடன் 3 பேரும் இறங்கினர். அடுத்து என்ன செய்வது என்ற பயம் அப்போதுதான் வந்தது. இரவு நேரமாகி விட்டதால் எங்கு போவது என்று தெரியாமல் பயம் நெஞ்சைக் கவ்வியது. வீட்டுக்குத் திரும்பலாம் என்றால் கையில் பணமும் இல்லை.
பயந்து நடுங்கிய மூன்று பேரும் என்ன செய்யலாம் என்று யோசித்தனர். அப்போது, உதயசங்கர் தான் வைத்திருந்த செல்போன் மூலம் தனது தந்தைக்குப் போன் செய்தான். தங்களை யாரோ சிலர் கடத்தி வந்து விட்டதாக கூறி போனை வைத்துள்ளான்.
அதிர்ந்து போன உதயசங்கரின் தந்தை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், செல்போன் அழைப்பு எந்த இடத்திலிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர் போலீஸ் படை குமணன் சாவடிக்கு விரைந்தது. அங்கு 3 சிறுவர்களும் பரிதவித்து திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து கூப்பிட்டு விசாரித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இனிமேல் இதுபோல விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தரப்பட்டு 3 பேரும் ஒப்பைடக்கப்பட்டனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications