மன்மோகன்,சோனியாவுக்கு கருணாநிதி அவசர கடிதம்
சென்னை:இட ஒதுக்கீடு சட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்டி விவாதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நான் உங்ளுடைய கவனத்துக்கு தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம் என்பதைக் கொண்டு வர விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முன்பு இருந்த திமுக அரசின் கருத்தை ஏற்றுத்தான் அப்போதைய வி.பி.சிங் அரசு மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது.
கட்சி வேறுபாடு இல்லாமல், தமிழக மக்கள் அனைவரும் 29.3.2007 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடையாணையால் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
எனவே தமிழக மக்கள் சார்பிலும், அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும், வருகிற கல்வியாண்டிலிருந்து இட ஒதுக்கீடு பலனை பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் வகையில், முடிவு எடுக்க நாடாளுமன்றத்திந் இரு அவைகளையும் கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications