செங்கல் சூளை இடிந்து 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை அருகே உசிலம்பட்டியில் செங்கல் சூளையின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உடல் நசுங்கிப் பலியானார்கள்.
உசிலம்பட்டியில் குபேந்திரன் என்பவர் செங்கல் சூளை வைத்துள்ளார். நேற்று இரவு குபேந்திரனும் அவரது உறவினர்கள் சிலரும் சூளையில் படுத்துத் தூங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை சூளை காளவாசலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சூளையில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல்கள் விழுந்து குபேந்திரன், பவுன்ராஜ், செந்தில், விக்னேஷ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications