மீலாடி நபி: ஆளுநர், முதல்வர், ஜெ. வாழ்த்து
சென்னை:மீலாடி நபியை முன்னிட்டு ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் முஸ்லீம்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மீலாடி நபி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முகம்மது நபிகளின் பிறந்த தினமான மீலாடி நபியைக் கொண்டாடும் தமிழக முஸ்லீம் பெருமக்களை வாழ்த்துகிறேன்.
நபிகளாரின் போதனைகள் மீதான நமது நம்பிக்கைகைய இன்றைய நாளில் அறுதியிட்டு உறுதியாக வெளிப்படுத்துவோம். சகோதரத்துவம், அமைதி, பரஸ்பர அன்பு பெருக உறுதி எடுப்போம் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 2006ம் ஆண்டு திமுக அரசு பதவிக்கு வந்ததும் மீலாடி நபி தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தது. ஆனால் பின்னர் வந்த அதிமுக அரசு அதை ரத்து செய்தது.
முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நபிகளார், உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என தனது போதனைகளில் கூறியுள்ளார்.
அதற்கேற்ப, திமுகவும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டது, நிறைவேற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் அமைதி, அன்பு, சமத்துவத்தைதப் போதித்தார். அது இன்றைக்கும் பொருந்தக் கூடிய செய்தியாகவே உள்ளது.
தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகிய மிரட்டல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும், நமக்கு நபிகளாரின் போதனைகள் வழி காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications