அயர்லாந்து அபாரம்- போராடி வென்ற இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil

ஜார்ஜ்டவுன் (கயானா)அயர்லாந்து அணியின் அபார திறமையான ஆட்டத்தை சமாளித்து இங்கிலாந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தனது சூப்பர் எட்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 8 சுற்றில், இங்கிலாந்தும், அயர்லாந்தும் நேற்று மோதின. சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய பயமுறுத்திய அணி அயர்லாந்து என்பதால், இங்கிலாந்து மிகுந்த கவனமாகவே இப்ேபாட்டியை எதிர்கொண்டது.

Andrew White

முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை அயர்லாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் வேகமாக அவுட் செய்யவே ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. எட் ஜாய்ஸ் (இவர் அயர்லாந்தில் பிறந்தவர்) 1 ரன்னுடனும், கேப்டன் வாகன் 6 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த இயான் பெல் (31) சற்ேற நிதானமாக ஆடி சரிவை நிறுத்தினார். கெவின் பீட்டர்சனும் சிறப்பாக ஆடி 48 ரன்களைச் சேர்த்தார்.

ஆனால் இவர்களுக்குப் பின்னர் வந்த பால் காலிங்வுட்தான் ஆட்டத்தை இங்கிலாந்தின் பக்கம் திருப்பினார். அதிரடியாக ஆடிய பால், 82 பந்துகளில் 90 ரன்களை விளாசினார்.

Paul Collingwood

காலிங்வுட் வருவதற்கு முன்பு 4 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களில் தடுமாறிக் ெகாண்டிருந்தது இங்கிலாந்து. காலிங்வுட்டுக்குத் துணையாக பிளின்டாப்பும் சிறப்பாக ஆடினார். அவர் 43 ரன்களைச் சேர்த்தார்.

இறுதியில், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 266 ரன்களை எடுத்தது இங்கிலாந்து. அயர்லாந்து அணியின் ரான்கின் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதன் பின்னர் அயர்லாந்து தனது பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காராரக களம் இறங்கிய போர்ட்டர்பீல்டு சிறப்பாக ஆடி 31 ரன்களை எடுத்தார். ஜெரீமி பிரே டக் அவுட் ஆனார்.

Niall OBrien

அயர்லாந்தின் முதல் விக்ெகட் ஸ்கோர் 6 ஆக இருக்கும்போது விழுந்தது 72 ரன்களில் 3 விக்ெகட்டுகளை இழந்து தடுமாறிக் ெகாண்டிருந்த அயர்லாந்தை நீல் ஓபிரையன் வந்து காப்பாற்றினார். சிறப்பாக ஆடிய அவர் 63 ரன்களை எடுத்தார்.

அவருக்கு அடுத்து கேப்டன் ஜான்ஸ்டனும் சிறப்பாக ஆடி 27 ரன்களைச் சேர்த்தார். விக்கெட் விழுவதைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் தைரியமாக இங்கிலாந்து பந்து வீச்சை சந்தித்து ரன்களைச் சேர்த்தது அயர்லாந்து.

முதல் முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்ேனறியுள்ள அயர்லாந்து, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கஷ்டபடுத்தி விட்டது. மிகவும் ெமதுவாகவும், அதேசமயம் நிதானமாகவும் ரன் சேர்த்து வந்த அவர்கள் ஒரு கட்டத்தில் ெவற்றிக் கனியைப் பறித்தாலும் பறித்து விடுவார்கள் என்ற அளவுக்கு ஆட்டம் பரபரப்பாக போனது.

இருப்பினும் 48.1 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அயர்லாந்து. இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி ெபற்றது.

பிளின்டாப் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுக்களைச் சாய்த்தார். மான்டி பனீசர் 2 விக்கெட்டுக்ளை எடுத்தார்.

இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும், பலவானாக மாறத் துடிக்கும் வங்கதேசமும் ேமாதவுள்ளன. முன்பு ஒருமுறை ஆஸ்திரேலியாவை வென்ற அனுபவம் வங்கதேசத்திடம் உள்ளது. ஆனால் தற்போது ரன் மெஷின் மாத்யூ ஹைடன் படு பயங்கரமான ஃபார்மில் உள்ளால் வங்கேதசத்திற்கு எதிராக அவர் பேயாட்டம் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+