ரயில்கள் ரத்து - விமான நேரங்கள் மாற்றம்
சென்னை:பந்த்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
பல்லவன் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை-புதுச்சேரி எக்ஸ்பிரஸ், சென்னை-மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூர்-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை-கோவை கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ்,
சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி-சென்னை எக்ஸ்பிரஸ், கருடாத்திரி எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், அரக்கோணம்-ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், ஏலகிரி எக்ஸ்பிரஸ், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர்-குருவாயூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில்-சென்னை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி-சேரனூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம்-சென்னை இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரல்-மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை- பாலக்காடு இடையே ரத்து செயய்ப்படுகிறது.
மைசூர்-சென்னை காவிரி எக்ஸ்பிரஸ் ரயில், அரக்கோணத்துடன் நிறுத்தப்படும். மாலை 6 மணிக்கு மேல் அது சென்னைக்கு வந்து சேரும்.
இதுதவிர பல ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் இயக்கப்படும்.
ரயில்கள் ரத்து, மாற்றம் குறித்து அறிய விரும்புவோரின் வசதிக்காக சிறப்பு தகவல் மையத்தை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது.
இதற்கான தொலைபேசி எண்கள்
சென்னை சென்டிரல் - 044-25024544, 25024545, 25024546.
சென்னை எழும்பூர் - 044-64502415, 64502416.
விமான நேரங்களில் மாற்றம்
அதேசமயம், விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. நிலைமைக்கு ஏற்ப விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானங்களின் நேரங்களை பந்த்துக்கேற்ப மாற்றி அறிவித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications