புதன்கிழமை உல்மர் உடல் அடக்கம்
ஜோகன்னஸ்பர்க்:கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மரின் உடல் அடக்கம் வருகிற புதன்கிழைம தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்துடன் நடந்த போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், பாப் உல்மர் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.
இந்த நிலையில், பாப் உல்மரின் உடல் அடக்கம் கேப்டவுன் நகரில் வருகிற புதன்கிழமை நடைபெறும் பாப் உல்மர் நிறுவிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கேப்டவுனில் உள்ள வைன்பெர்க் ஆடவர் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாப் உல்மர் இங்கிலாந்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடந்த 20 வருடங்களாக தென்ஆப்பிரிக்காவில்தான் வாழ்ந்து வருகிறார். தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் அவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications