குடியாத்தம் அணை: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:குடியாத்தம் மோர்தனா அணையை திறக்க கோரி அதிமுக சார்பில் வரும் 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் மோர்தனா என்ற அணை விவசாயிகளின் பயன்பட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி அதிமுக ஆட்சியின் போது 2005ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அணை திறக்கப்பட்ட அதே நாளில், அதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட துரைமுருகன், தான் உண்ணாவிரதம் இருந்து அணை திறக்கப்பட்டதாகக் காட்ட வேண்டும் என்று அன்று விளம்பர அரசியல் நடத்தினார்.

இம்மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம், மோர்தனா அணையில் இருந்து நீரை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை வைத்து பல மாதங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இது சம்பந்தமாக திமுக அரசு மெத்தனமாக இருந்து வருவதாகவும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களும், விவசாயிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆகவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகல் பயன்பெறும் வகையில் குடியாத்ததில் உள்ள மோர்தனா அணையில் இருந்து உடனடியாக நீரைத் திறந்து விடக்கோரியும், இவ்விஷயத்தில் மெத்தனமாக இருக்கும் திமுக அரசை கண்டித்தும், அதிமுக வேலூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு வரும் 4ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+