இலங்கையுடன் கூட்டு ரோந்து- இந்தியா பரிசீலனை
டெல்லி:பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டு ரோந்து செல்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.
14வது சார்க் மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. இதையொட்டி சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நேற்று நடந்தது. இக்கூட்டம் குறித்து பின்னர் மேனன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா இக்கூட்டத்துக்கு முன்பாக தனித்துப் பேசினர்.
அப்போது, பாக் ஜலசந்தியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கைதான் இந்த கோரிக்கையை முன்வைத்தது. இருப்பினும் இதுதொடர்பாக இந்தியா தனது முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இலங்கை இனப் பிரச்சினைக்கு அைமதியான, பேச்சுவார்த்ைத மூலமான தீர்வே சரியானது என்று இலங்கை அமைச்சரிடம், மத்திய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.
இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இதை இலங்கை வெளியுறவு அமைச்சர் மறுத்தார். அந்த சம்பவங்களில் இலங்கை கடற்படைக்கு தொடர்பு கிடையாது என்று அவர் தெரிவித்தார்.
இதுேபான்ற சம்பவங்கள் மறுபடியும் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது என்றார் மேனன்.
மீனவர்களை நாங்கள் சுடவில்லை: இலங்கை
இந் நிலையில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்கும், இலங்கை கடற்படைக்கும் தொடர்பு இல்லை. இந்திய கடல் எல்லைக்குள்தான் இச்சம்பவங்கள் நடந்துள்ளன என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைச் ேசர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்கும், இலங்கை கடற்படைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள்தான் நடந்துள்ளது. இலங்கை மீனவர்களுக்கும் இதில் தொடர்பு இல்லை. இதை தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒப்புக் ெகாண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்குலைக்க விடுதலைப் புலிகள்தான் இதை செய்திருக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கையும், இந்திய கடற்படையும் இணைந்து பாக் ஜலசந்தியில் கூட்டு ேராந்து செல்லலாம் என இலங்கை அரசு, இந்தியாவிடம் யோசனை தெரிவித்துள்ளது. அந்த யோசனையை இந்தியா பரிசீலித்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் விடுதலைப் புலிகளுக்கு இன்னும் திறந்தே இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என புலிகளை சார்க் நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலை போர் என்று எடுத்துக் ெகாள்ள முடியாது. விடுதலைப் புலிகளை சமாளிக்க சர்வதேச உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையில் புதிய அரசியல் சட்டம் பரிந்துரைக்கப்படும். அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆேலாசனை நடத்திய பின்னர் அதன் அடிப்படையில் புதிய அரசியல் சட்டம் வடிவமைக்கப்படும் என்றார் பொக்கல்லகாமா.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications